எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வரதராஜன்பேட்டை, டிச.23 அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஓலையூர் கிராமம் கலியன்குளம் அருகே காளியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்த பின் னர் அக்கோவிலின் பூசாரி சுப்பிரமணியன் (வயது 45) கோவிலை பூட்டி விட்டு வீட் டிற்குச் சென்றார். மார்கழி மாதபூஜையையொட்டிஒலி பெருக்கியில் பாடல் போடுவதற் காக மருதுபாண்டியன் என்பவர் நேற்று காலை கோவிலுக்கு வந்தார்.

அப்போது கோவிலின் வெளிப்புறக் கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பூசாரி சுப்பிர மணியன் மற்றும் கோவில் நிர்வாகி கலியபெருமாள் ஆகி யோருக்குத் தகவல் தெரிவித்தார். அதன் பேரில் அவர்கள் கோவி லுக்கு வந்து பார்த்த போது, கோவில்கருவறையின்கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த வெண்கலத்தால் ஆன காளியம் மன் சிலை திருட்டு போயிருந்தது கண்டு திடுக்கிட்டனர்.  இதற் கிடையே சிலை திருட்டு நடந்த சம்பவத்தை அறிந்ததும் பொதுமக்கள் கோவிலின் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந் ததும் ஜெயங்கொண்டம் காவல் துறையினர் காளியம்மன் கோவி லுக்கு வந்து விசாரணை நடத் தினர். அப்போது கோவிலின் உண்டியல் சற்று தூரத்தில் கிடந்தது தெரியவந்தது. ஆனால் அதில் பணம் ஏதும் இல்லை.

மேலும், துப்பு துலக்க காவல்துறை மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் சற்று தூரம் வரை ஓடி நின்று விட்டது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.

திருட்டு போன சாமி சிலை மூன்றடி உயரம் கொண்டது. சிலையின் பொலிவுக்காக அதில் ஒரு பவுன் தங்கம் சேர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்டது. இந்த சிலையின் மதிப்பு ரூ.2 லட்சம். கடந்த ஆண்டு இந்த கோவிலில் குடமுழுக்கு நடந்த பின்னர்தான் இந்தவெண்கலசிலைகோவி லில்வைக்கப்பட்டதுஎன்று கோவில் நிர்வாகிகள் காவல் துறையினரிடம் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஆண்டிமடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிலையை திருடிச் சென்றவர்களைத் தேடி வருகின்றனர்.

தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத அம்மன் பக் தர்களை எப்படி காப்பாற்றும்? பக்தி வந்தால் புத்தி போகும்; புத்தி வந்தால் பக்தி போகும்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner