எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கங்கை மற்றும் காசிக்குச் சென்று பாப விமோசனம் பெற விரும்பும் எளிய பக்தர்களுக்கு, தீர்த்தங்கள் நிறைந்த திருத்தல மான திருவண்ணாமலை ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள் ளது என்றால், அது மிகை யாகாது.

அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் சிவ கங்கை மற்றும் பிரம்ம தீர்த் தங்கள் சிறப்புடையதாக கரு தப்படுகிறது - இதில், ‘சிவகங்கை தீர்த்தத்தைத் தினந்தோறும் உள் ளத்தில் நினைத்தாலே, கங்கை யில் மூழ்கிய பலன் உண்டாகும்.’

******

அண்ணாமலையார் கோவில் பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கியவர் பிறவிக்கடல் நீந்திச் சென்று பிறப்புகளில் சேர்ந்த தீவினைகள் நீங்கப் பெறுவர்.

******

இந்தத் தீர்த்தத்தில் மூழ்கி, அணு அளவு பொன்தானம் செய்தால், நவமணிகள் நிறைந்த நிலவுலகத்தையே ஒரு அடி யாருக்கு கொடுத்த பாக்கியத் தைப் பெறுவார்கள். அதோடு இந்தத் தீர்த்தத்தில் மூழ்கித் தானம் செய்பவர் சிவபெருமா னின் அடிக்கமலத்தை அடை வார்கள் என்பது அய்தீகம்.

******

இதேபோன்று, ‘இந்திர தீர்த் தம்‘ என்பது திருவண்ணாமலை, அய்யங்குளத் தெருவில்  அமைந்துள்ளது. இது இந்தி ரனால் உண்டாக்கப்பட்டதால் இதற்கு இந்திர தீர்த்தம் எனப் பெயர் ஏற்பட்டது. இதில் தைப் பூச நாளில் மூழ்கி ஒரு கைநீர் எடுத்துக் குடித்தால் கோடி தோஷங்கள் அகலும்.

******

இதில் மூழ்கி எழுந்த இந் திரன், தன் குற்றங்கள் நீங்கப் பெற்று, ஆகாயத்தை ஆளும் பேறு பெற்றான்.

******

இதுபோன்றவை அள்ளிக் கொட்டப்பட்டுள்ளன. எந்த ஏட்டில் இப்படிப்பட்ட குப்பை கள் இடம்பெறும்? ‘தினமலர்’ என்பதுதான் எல்லோருக்கும் தெரிந்த சேதி ஆயிற்றே!

உண்மையைச் சொல்லப் போனால், மதத்தின் பெயரால் மக்களின் ஆரோக்கியத்தை ஆணிவேரோடு அழிக்கும் மிகப்பெரிய ஆபத்தான குற்றச் செயல் அல்லவா இது?

நோய்கள் தொற்றுவதில் முதலிடத்தில் இருப்பது நீர் நிலைகள்தான் என்பது மருத் துவ உலகம் அறுதியிட்டு நிறுவிய அறிவியல் உண்மை. இந்த நிலையில், இப்படிப்பட்ட ஆபத்தான - மக்களின் உயி ரோடு விளையாடும் பார்ப்பனீ யத்தை எந்த வகையில் அழித் தாலும் தகும்தானே!

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவது கும்பகோணம் மகாமகம். அந்நாளில், அக்குளத் தில் குளித்தால் 12 ஆண்டுகள் மூட்டை மூட்டையாகச் சேர்த்து வைத்த பாவ மூட்டைகள் எல் லாம் கூண்டோடு அழிந்துவிடும் - அதுவும் அவர்கள் மொழியில் அய்தீகம்தான்.

பல லட்சம் பேர் குளிக்கும் அந்தக் குளத்தின் நீரை எடுத் துப் பரிசோதனைக்கு அனுப்பி யவர் திராவிடர் கழகத்துக்காரர் அல்ல - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்.

அந்தப் பரிசோதனையின் முடிவு என்ன தெரியுமா? மலக் கழிவு 25 விழுக்காடு; சிறுநீர்க் கழிவு 50 விழுக்காடு கிருமிகள் இ-கோலி, எசரிக்கியா கோலி (ஞிt ழிமீஜ்t 23.2.2016) புண்ணிய நீரா - உயிரைக் குடிக்கும் சாக்க டையா? சிந்திப்பீர்!

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner