எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரியார் - அண்ணா - கலைஞர் வழியில்

தி.மு.க.வை நடத்திச் செல்லும் தளபதி அவர்களுக்கு

கவிஞர் கனிமொழி உறுதுணையாக இருப்பார்

செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்

சென்னை, டிச.25 பெரியார் - அண்ணா - கலைஞர் வழியில் தி.மு.க.வை நடத்திச் செல்லும் தளபதி அவர்களுக்கு கவிஞர் கனிமொழி அவர்கள் உறுதுணையாக இருப்பார் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் செய்தியாளர்களிடம் கூறினார்.

சென்னை பெரியார் திடலுக்கு இன்று (25.12.2017)  காலை வருகை புரிந்த கனிமொழி எம்.பி. அவர்கள் தமிழர் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிகழ்விற்குப் பிறகு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

2ஜி வழக்கில் அபாண்டமாக சம்மந்தப்படுத்தப்பட்டு, 20 நாட்களே கலைஞர் தொலைக்காட்சியில் இயக்குநராக இருந் தார் என்கிற ஒரு வாய்ப்பைப் பயன்படுத்தி, போலியாகத் தயாரிக்கப்பட்ட, போடப்பட்ட பழிவாங்கக் கூடிய வழக்கிலிருந்து மேனாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா, கவிஞர் கனிமொழி உள்பட அந்த வழக்கிலிருந்து அனைவரும் விடுதலையானது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.

நெருக்கடிநிலை காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் எப்படிப்பட்ட ஒரு கொடுமையை சந்தித்ததோ, அதைவிட கொடுமையான ஒரு காலகட்டம்.

செய்யாத குற்றத்திற்கு ஜென்ம தண்டனை என்பது போல, ஒரு பெரிய குற்றத்தை செய்ததாகச் சித்தரித்து, தேவையற்று ஆறுமாத காலம் அவர்கள் திகார் சிறையில் இருந்தார் என்பதை நினைக்கும்பொழுது, எங்களால் வார்த்தைகளால் வர்ணிக்கப்பட முடியாத துன்பச்சூழல்.

ஆ.இராசா அவர்கள் ஒன்றரை ஆண்டுகாலம் சிறையில் இருந்தார்; இன்றைக்கு விடுதலை செய்யப் பட்டார்கள் என்பது இருந்தாலும், அந்த மனவேதனை, மன நெருக்கடி எப்படிப்பட்டது என்பதையெல்லாம் பாதிக்கப்பட்டவர்களால்தானே உணர முடியும்.

எங்களைப் பொறுத்தவரையில், கவிஞர் கனிமொழி அவர்கள், எங்களுடைய செல்லப்பிள்ளை; காரணம், கொள்கை ரீதியாக அவர்கள் முழுக்க முழுக்க ஒரு தலைசிறந்த பகுத்தறிவுவாதியாக குழந்தைப் பருவத்திலிருந்து வளர்க்கப்பட்டவர். இன்னமும் அந்தக் கொள்கையில் கொஞ்சம்கூட வளையாதவர். அதேபோல, ஆ.இராசா அவர்களும் அதேபோல சிறந்த பகுத்தறிவுவாதி.

எனவேதான், பகுத்தறிவாளர்களால் சோதனை களை சாதனைகளாக மாற்ற முடியும் என்ற அளவில்தான், மகிழ்ச்சியோடு இன்றைக்கு ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னால் சொல்லிக் கொண்டிருந்தோம். அவர்களைப் பொறுத்தவரையில், இந்த மகிழ்ச்சி நீடிக்கவேண்டும் - நீடிக்கும்.

எத்தனை சோதனைகள் இயக்கத்திற்கு ஏற்பட் டாலும் அதனைத் தாங்கக் கூடிய அளவிற்கு இருப் பார்கள். மகளிர் அணியை சிறப்பாக நடத்திக்கொண்டு, அதன்மூலம் கொள்கைபூர்வமான அணி என்ற அளவில், வெறும் பதவிக்காக அல்ல - கொள்கைக்காக, லட்சியத்திற்காக என்ற பெரியார் - அண்ணா - கலைஞர் வழியில் இயக்கத்தை நடத்திச் செல்வதற்கு,  தளபதிக்கு மிக உற்ற துணையாக என்றைக்கும் கனிமொழி அவர்கள் இருப்பார்கள் என்ற அந்தக் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டிருந்தோம் நாங்கள்.

செய்தியாளர்: கனிமொழி அவர்கள் 2ஜி வழக் கில் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.  ஆனால், இவர் 6 மாத காலம் சிறைத் தண்டனை அனுபவித்திருக்கிறாரே? அதற்கு என்ன ஈடுசெய்யப் போகிறார்கள்?

தமிழர் தலைவர்: நல்ல கேள்வி. இதற்கு ஈடு என்பதை சுலபமாக செய்ய முடியாது. இன்றைக்குக் காலையில் ஒரு செய்தி வந்திருக்கிறது. மிசா காலத்தில் இருப்பவர்களுக்கெல்லாம் ஓய்வூதியம் கொடுக்கப் போகிறோம் என்று.

பொருளாதார அளவுகோல் வைத்து அதனை எதிர்பார்க்கக் கூடியதல்ல. ஆனால், இதற்கு ஒரே ஒரு வழிதான் - இதற்கு எந்த அடிப்படையில் காரணமாக இருந்தார்களோ, அந்தக் கொள்கைக்குத் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே இடமில்லை என்று காட்டுவதுதான் ஒரே ஒரு பரிகாரமாகும்; அது நிரந் தரப் பரிகாரமாகும்.

- இவ்வாறு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

பெரியார்திடல்தான்!

என்னுடைய பாசறை

கவிஞர் கனிமொழி

சென்னை பெரியார் திடலுக்கு வருகை புரிந்த கவிஞர் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்பேட்டியின் விவரம் வருமாறு:

என்னுடைய கொள்கைகளுக்கும், எனக்கும் உறுதுணையாக, உறுதியாக, நான் என்னுடைய பாசறையாக நினைக்கக்கூடிய பெரியார் திடலுக்கு வந்து, ஆசிரியர் அவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றது எனக்குப் பெருமையான ஒன்றாகும்.

செய்தியாளர்: அரசியலில் உங்களின் அடுத்த நடவடிக்கை என்ன?

கனிமொழி: நான் அரசியலில்தானே தொடர்ந்து இருந்துகொண்டிருக்கிறேன்.

செய்தியாளர்: கட்சியில் உங்களுக்கு வேறு பதவிகள் கொடுப்பார்களா?

கனிமொழி: எனக்குக் கொடுத்திருக்கின்ற பதவியே மகிழ்ச்சியான பதவி. தொடர்ந்து மகளிரணியில், சகோ தரிகளோடு பணியாற்றுவதையே நான் விரும்புகிறேன்.

- இவ்வாறு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார் கவிஞர் கனிமொழி எம்.பி. அவர்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner