எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழக சட்டப்பேரவை

ஜனவரி 8 ஆம் தேதி கூடுகிறது

சென்னை, டிச.28 தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் ஜனவரி 8 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க இருப்பதாக பேரவை செயலாளர் பூபதி அறிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டம் என்பதால், சட்டப் பேரவைக் கூட்டத்தின் முதல் நாளில் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் உரையாற்றுவார் என்று செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 8 ஆம் தேதி சட்டப் பேரவைக் கூட்டம் தொடங்கி 3 அல்லது 4 நாட்கள் நடைபெறும் என்றும், இந்த கூட்டத்தில், ஆளுநர் உரை மற்றும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுவது மட் டுமே நடைபெறும் என்றும், அதைத் தவிர்த்து, ஆளுநர் உரை மீது விரிவான விவாதம் நடைபெறலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசு தரப்பில் செயல் படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து விளக்கம் மற்றும் அடுத்த ஆண்டில் செயல்படுத்தவிருக்கும் திட்டங்கள் குறித்து ஆளுநர் உரையில்இடம்பெறும்.ஆளுநர் உரை மற்றும் விவா தம்மட்டுமேஇடம்பெறும்என்ப தால், தமிழகத்தில் இருக்கும் பிரச்சினைகள் குறித்து எதிர்க் கட்சிகள் பேச வாய்ப்பு அளிக் கப்படும்.தெரியுமா சேதி?

புத்தாண்டில் டாஸ்மாக்கில் ரூ.200 கோடி விற்பனை யாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம்.

******

கடந்த நான்கு ஆண்டுகளில் சி.பி.அய். நடத்திய ஊழல் வழக் குகளில் 3,268 பேர் விடுதலை. என்னே சி.பி.அய்.யின் தகுதி - திறமை?

****

2014 ஆம் ஆண்டுமுதல் 2016ஆம்ஆண்டுவரைசிறைச் சாலைகளில் 445 கைதிகள் இயற்கைக்கு மாறாக சந்தேகத்திற் கிடமான முறையில் இறந்துள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner