எழுத்துரு அளவு Larger Font Smaller Font


நடப்பு நிதியாண்டில் இந்தி யாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 விழுக்காட்டைத் தாண்டவே தாண்டாது என்கிறது கிரிசில் நிறுவனம்.

பசுவைப் பாதுகாக்குகிறார்களாம்!

சத்திஸ்கரில் மன்ஹரன்லால் சாகு பசு பாதுகாப்பகம் ஒன்றை நடத்தி வருகின்றார். கடந்த 2 வாரங்களில் 50-க்கும் மேற்பட்ட பசுக்கள் போதிய உணவின்றி, பராமரிப்பின்றி மாண்டன. புகாரின்பேரில், நேரில் ஆய்வு செய்த காவல்துறை, இதனை உறுதி செய்தது.

அரசு உதவியோடு அதே மாநிலத்தில் இயங்கும் மூன்று பசு பாதுகாப்பு மய்யங்களில் 200 பசுக்கள் பட்டினியால் மாண் டன.
(கோமாதா குலமாதா என்ப தன் கோஷம் இதுதானா?)

அறிவிக்காதது ஏன்?

2017 செப்டம்பர் மாதத்துடன் வங்கிகளில் வாராக் கடன் ரூ.8.50 லட்சம் என்று நிதித்துறை இணையமைச்சர் ஷிவ்பிரதாப் எழுத்துப்பூர்வமாக நாடாளுமன் றத்தில் அறிவித்தார்.
12 பேர்களின் கணக்குகளில் மட்டும் 25 விழுக்காடு வாராக் கடன் உள்ளது. அந்த 12 பேர் யார்? நாடாளுமன்றத்தில் அறி விக்கப்படாதது ஏன்?

(கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சிதானே இது!)

மூடுவிழா

பி.ஜே.பி. ஆளும் மகாராட் டிர மாநிலத்தில் 1,300 பள்ளிகள் இழுத்து மூடப்பட்டன.

குடியுரிமை

கடந்த நான்கு ஆண்டுகளில் வெளிநாடுகளில் குடியுரிமை பெற்ற இந்தியர்கள் நாலரை லட்சம்.

உயிரிழப்பு

நாளன்றுக்கு சாலை விபத்துகளில் இந்தியாவில் உயிரிழப்பு 400.

விடுவிப்பு

புத்தாண்டை முன்னிட்டு 69 தமிழக  மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு ஆணை.
இப்படி சொல்கிறார்

ரசிகர்களாகிய உங்களுக்குக் கிடா வெட்டி விருந்து வைக்க எனக்கு ஆசைதான்.எனக்குச் சொந்தமான ராகவேந்திரா திரு மணக் கூடத்தில் அசைவத்திற்கு இடம் கிடையாது.

(ஓகோ! இப்படி ஒரு ‘துவேஷமா?’)

லென்சு

மனிதனின் முடியைவிட இரண்டாயிரம்மடங்குமெலி தான லென்சை ஆஸ்திரே லிய விஞ்ஞானிகள் கண்டுபிடித் துள்ளனர்.

(மோடியிடம் சொல்ல வேண்டாம்; புராணத்திலிருந்து ஏதாவது ஒரு அளப்பை அள்ளி விடுவார்!).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner