எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆண்டொன்றுக்கு 10 லட்சம் யூனிட்டுகள் பாழாகும் அவலம்

புதுடில்லி, டிச.29 இந்தியாவில் ஆண் டொன்றுக்கு மருத்துவத்துறையில் பல் வேறு நிலைகளில் பயன்படுத்துவதற்கு ஒரு கோடி முதல் ஒரு கோடியே 20 லட்சம் யூனிட் வரை குருதியின் தேவை உள்ளது. ஆனால், குருதிக்கொடை மூலமாக சேகரிக்கப்படுவதோ  ஒரு கோடி யூனிட்டுக்கும் குறைவாக 99 லட்சம் யூனிட்டுகளே ஆகும். அப்படி சேகரிக்கப்படுகின்ற குருதியும் உரிய நேரத்தில் பயன்படுத்தப்படாமை, சேமிப் பில் பாதுகாப்பின்மை, காலங்கடந்து காலாவதியாதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் பாழாக்கப்படுகின்றன.

ஒரு யூனிட் குருதி என்பது 450 மி.லி. அளவு ஆகும். ஒரு யூனிட் குருதியைக் கொண்டு மூன்று உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

இதய அறுவை சிகிச்சைக்கு சுமார் ஆறு யூனிட்டுகள் குருதி தேவைப்படுகிறது. சாலைவிபத்துகளில்காயமடைந்துஉயி ருக்குப்போராடுவோருக்கு100யூனிட் வரைகுருதிதேவைப்படும்.மருத்துவ மனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் படுவோரில் 10 பேரில் ஒருவருக்கு குருதி தேவை உள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

நாடாளுமன்றத்தில் மக்களவையில் கேள்வி நேரத்தில் பதில் அளிக்கும்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்த புள்ளிவிவரங்களின்படி, தொற்று நோய்களுக்கான (மலேரியா, அம்மை, எச்அய்வி, ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி) எதிர்வினை காலங்கடப்பதால் குறிப்பாக இரத்த அணுக்களின் எண் ணிக்கை குறைந்துபோகின்றது. அய்ந்து நாள்களுக்கு மட்டுமே உயிர்ப்புடன் இருக்கின்றன. இதுபோன்ற காரணங்களை மத்திய அமைச்சகம் கூறியுள்ளது.

மற்றபடி, சேமிப்பின்போது நிறம் மாற்றமடைவது, வீணாவது, இரத்த சிவப்பு அணுக்கள் சிதைவடைவது,  பாக்டீரியா கலப்பு, சேகரிப்பின்போதும், பயன்படுத்தும்போதும் முறையாகக் கையாள்வதில் குறைபாடு, கொடை யாளர்களின் தன்மைகளுக்கேற்ப தேவை யான அளவு எடுப்பதில் குறைபாடு உள்ளிட்டவையும் காரணிகளாக உள்ளன.

பெரிய விபத்துகள் அல்லது முக்கிய அறுவை சிகிச்சைகளின்போது குருதி இழப்புகள் நேர்கின்றன. தவறாக கருவுறு தல் அல்லது மகப்பேறு ஆகியவற்றில் உயிரைக்காப்பதற்கு அதிக அளவிலான குருதி ஏற்றப்பட வேண்டிய தேவை ஏற்படுகிறது.

இரத்தசோகை, இரத்தப் புற்றுநோய், இரத்தம் உறையாமை, தலசீமியா உள்ளிட்ட குருதி தொடர்பான நோயாளிகளுக்கு தொடர்ச்சியாக குருதி ஏற்றப்படுவது    மட்டுமே தீர்வாக உள்ளது.

விஷம் குடித்தவர்கள், போதைகளுக்கு ஆளானவர்கள், அதிர்ச்சி மற்றும் தீக் காயங்கள் உள்ளிட்டவர்களுக்கும் உயிர் காப்பதற்கு ஒரே வழி குருதி ஏற்றப்படுவது மட்டுமே!

மக்கள் தொகையில் ஒரு விழுக்காடு குருதிக்கொடை தேவை

ஒரு நாட்டின் மக்கள் தொகையில் ஒரு விழுக்காட்டளவில் குருதிக் கொடை பெறப்பட்டால், போதுமான அளவுக்குக் குருதியின் தேவை நிறைவடையும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

தற்பொழுது, 95 லட்சம் இந்தியர்கள் குருதிக்கொடை அளிக்கின்றனர். இது தேவைப்படும் அளவைக்காட்டிலும் 25 லட்சம் முதல் 30 லட்சம் வரை குறைவாகவே உள்ளது.

பன்னாட்டளவில் ஆண்டுதோறும் கருவுறுதல், மகப்பேறு மற்றும் குழந்தை கள் பிறந்த பின்னர் உள்ளிட்ட வகை களில் 2 லட்சத்து 87ஆயிரம் பெண்கள் உயிரிழக்கிறார்கள். அதில் வளரும் நாடுகளில் 99 விழுக்காடாக உள்ளது. போது மான குருதி கையிருப்பு மூலமாக அவர்கள் உயிரிழப்பதிலிருந்து காப்பாற்றலாம்  என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

மூன்று ஆண்டுகளில் விரயம்...

கடந்த மூன்று ஆண்டுகளில் குருதி பாழக்கப்பட்டது குறித்த விவரம் வருமாறு:

2014- 2015 ஆம் ஆண்டில் 10,19,095 யூனிட்டுகளும், 2015- 2016 ஆம் ஆண்டில் 12,77,658 யூனிட்டுகளும், 2016- 2017ஆம் ஆண்டில் 11,81,854 யூனிட்டுகளும் பலவகைகளில் குருதி வீணாகியுள்ளதாக புள்ளிவிவரத் தகவல்கள் கூறுகின்றன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner