எழுத்துரு அளவு Larger Font Smaller Font


போபால், டிச.29 மத்தியப்பிரதேச மாநிலத் தில் நடைபெற்று வருகின்ற பாஜக ஆட்சியில் வனம் மற்றும் சுற்று சூழல் துறைஅமைச்சரானகவுரிசங்கர்ஷெஜ் வார்அரசுமுறைப்பயணத்தில்குடும்பத்தி னருடன் அரசுப்பணத்தில் உல்லாசப்பயணம் செய்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள் ளது.

ஊழலுக்கு எதிரான செயற்பாட்டாளர் அஜய் தூபே தகவல்பெறும் உரிமைச்சட் டத்தின்கீழ் அமைச்சர் ஷெஜ்வாரின் கருநாடக அரசு முறைப்பயணம்குறித்து  கேள்வி எழுப்பியபோது, அமைச்சரின் ஊழல் முறைகேடு வெளியாகியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநில வனம் மற்றும் சுற்றசூழல்துறை அமைச்சர் கவுரி சங்கர்  ஷெஜ்வார்  கடந்த ஆண்டில் பிப்ரவரி மாதத்தில்கருநாடக மாநிலத்துக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். அப் போது அவருடன் அவர் மனைவி கிரண், அவர் மனைவியின் சகோதரி சாஷி தாக்கூர், மத்தியப்பிரதேச மாநில பசுமை சுற்றுலா வாரிய பணியாளர் வரஷா பரிகார் ஆகியோர்  உடன் சென்றனர்.

அந்த பயணத்துக்கான தொகையை பசுமை சுற்றுலா வளர்ச்சி வாரிய தலைமை செயல் அலுவலர் வினய் பர்மான் செலுத் தியுள்ளார்.

சுற்றுலா பயணத்துக்கான கட்டணமாக ரூ. இரண்டு லட்சம் செலுத்தப்பட வேண் டிய நிலையில், அமைச்சர் ரூ63,884 மட்டுமே செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் கவுரி சங்கர்  ஷெஜ்வார் கூறும்போது, “இது அடிப் படையற்ற குற்றச்சாற்று. மாநில அரசு ஒதுக்கியநிதிபோக,தனிப்பட்டவகையில் உள்ளவர்களுக்கு கட்டணம் செலுத்தப்பட்டு விட்டது.   வழக்கமான தணிக்கையின்போது இதுகுறித்து ஆட்சேபணை எதுவும் எழ வில்லை. விசாரணை வந்தால் சந்திப்பேன்’’ என்றார்.

பதவி விலக வேண்டும்
காங்கிரசு வலியுறுத்தல்

இதுகுறித்து காங்கிரசு கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவி சக்சேனா கூறுகையில்,

“கவுரிசங்கர்ஷெஜ்வார்மூத்த அரசியல்வாதி.அவருக்குசட்டவிதிமுறை கள்  தெரிந்திருக்கும். அவர் குடும்பத்தின ருடன் பயணம் செய்துள்ளார். லோக் ஆயுக்தாவுக்கு புகார் வந்தபிறகு, பணத்தை கட்டியுள்ளளார். ஆகவே, அவரே தாமாக முன்வந்து பதவியிலிருந்து விலகிட வேண் டும்’’ என்றார்

கொலை வழக்கிலும்
தொடர்பு

மத்தியப் பிரதேச மாநில பாஜக அரசில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் நரோட்டம் மிஸ்ரா, லால் சிங் ஆர்யா ஆகியோர் தேர்தலின்போது, செய்திகளை தங்களுக்கு சாதகமாக வெளியிடுவதற்கு பணம் கொடுத்த வழக்கில் தேர்தல் ஆணையத்தால் தகுதி இழப்பு செய்யப்பட்ட நிலையில், காங்கிரசு கட்சி சட்டமன்ற உறுப்பினர் கொலை வழக்கிலும் தொடர்புள்ளவர்களாகவும் இருந்து வருகிறார்கள். அம்மாநிலத்தில் பாஜகவினர் கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார்கள்.

லோக் ஆயுக்தா முன்பாக...

அமைச்சர் ஷெஜ்வார், பசுமை சுற் றுலா வளர்ச்சி வாரியத்தின் தலைமை செயல் அலுவலர் வினய் பர்மான் ஆகி யோர்மீது லோக் ஆயுக்தா வழக்கு பதிவு செய்துள்ளது. மத்தியப்பிரதேச மாநில தலைமைச் செயலாளர் அனைத்து ஆவணங் களுடன் 16.1.2018 அன்று லோக் ஆயுக்தா முன்பாக நேர் நிற்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner