எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பெங்களூரூ,டிச.29தங்களை மதசார்பற்றவர்கள்என்று சொல்லிக் கொண்டிருப்பவர் களுக்கு அவர்களின் சொந்த அடையாளமே தெரியவில்லை என்று கூறிய மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டேவுக்கு, நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் கண் டனம் தெரிவித்துள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ், தனது சமூகவலைதளப் பக்கத்தில், ‘‘உங்களை சில கேள்விகள் கேட்கிறேன்’’ என்ற அடையாளத்துடன் தொடர் கேள்வி களை எழுப்பிக்கொண்டு இருக்கிறார். இதன் மூலம் மத்திய  அரசு மீது மக்களுக்கு இருக்கும் கோபத்தை வெளிக் காட்டிக்கொண்டு வருகிறார்.

சமீபத்தில் கூட குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றது குறித்து தனது ட்விட்டரில், ‘‘அன்புள்ள மோடி, வெற்றிக்கு வாழ்த்துகள்.... ஆனால், நீங்கள் உண்மையில் சந்தோஷமாக இருக்கிறீர்களா?’’ என கேள்வி எழுப்பி இருந்தார். இவரது கேள்விகள் இந்திய அளவில் பிரபலமாகி வருகின்றன.

இந்த நிலையில், கருநாடக மாநிலம் குகானூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே, மக்கள் தங்களை தங்களின் மத அடையாளத்தோடு பெருமையோடு அழைத்துக் கொள்ளவேண்டும். தங்களை மதசார்பற்றவர்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்களின் சொந்த அடையாளமே தெரியவில்லை. அரசியல் சாசனத்தில் மதசார்பற்ற என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அரசியல் சாசனம் பலமுறை மாற்றப்பட்டிருக்கிறது என்றார். மேலும், மதசார்பற்ற என்ற வார்த்தையும் மாற்றப்படும் என்றும், அதை மாற்று வதற்காகவே தாங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், மதசார்பற்றவர்களின் பிறப்பை கேவலப்படுத்துவதா எனக் கொந்தளித்துள்ளார். மேலும் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியாக இருந்துகொண்டு மக்களையே கேவலப்படுத்துவதற்கு யார் அதிகாரம் கொடுத்தது? என்றும் கேட்டுள்ளார். பிற மதங்களைத் திட்டுவது, மதசார்பற்றவர்களை கேவலமாகப் பேசுவது உள்ளிட்டவைகளிலிருந்து எப்போது விடுபடுவீர்கள் எனவும் பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுவும் எதிர்வினைதானோ!

உடுப்பியில்நடைபெற்றவிழா வில் பேசிய மத்திய அமைச்சர் அனந்த்குமார்ஹெக்டே,‘‘மதச் சார்பின்மை குறித்துப் பேசுவோ ருக்கு தாங்கள் எந்த ரத்தத்தில் இருந்து வந்தோம் என்று தெரிய வில்லை. அவர்களுக்குக் கலாச் சாரம், பாரம்பரியம் இல்லை’’ எனத்தெரிவித்திருந்தார்.இது கருநாடகாவில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கல்புர்கி மாவட்ட பஞ்சாயத்து உறுப்பி னரும், தலித் அமைப்பை சேர்ந்தவருமான குருசந்த் பட்டேடர் மத்திய அமைச்சரின் நாக்கை அறுத்து வரு வோருக்கு ரூ.1  கோடி பரிசு தருவதாக தெரிவித்துள்ளார்.
ஒரு மாதத்துக்குள் அதாவது ஜனவரி 26 ஆம் தேதிக்குள் இதனை செய்து முடிக்கவேண்டும் என்றும் அவர் கெடு விதித்துள்ளாராம். குருசந்த் பட்டேடர் தற்போது அசாதுதீன் ஓவைசி கட்சியிலும் நிர்வாகியாக உள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner