எழுத்துரு அளவு Larger Font Smaller Font


புதுடில்லி, டிச.30 பாஜக அரசின் மூத்தஅமைச்சர்கள்ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பங்கேற்ற ஆலோ சனைக் கூட்டம் நேற்று (29.12.2017) டில்லியில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் பொருளா தாரப்பிரச்சினைகள்,குறிப் பாக பொருளாதாரச் சரிவுக் கான காரணங்கள், விவசாயப் பிரச்சினைகள், தொழிலாளர் பிரச்சினைகள், வேலைவாய்ப்பு பிரச்சினைகள்,எதிர்வரும் 2019 ஆம்ஆண்டில்நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் பரப்புரைக் கான செயல்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள்குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் கள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசின் சார்பில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவேண்டிய 2018-2019 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கைகுறித்து பாஜக தலைமையிலான மத்திய அரசின் மூத்த அமைச்சர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொறுப்பாளர்களிடம் ஆலோ சனை மேற்கொண்டனர்.

மத்திய உள்துறை அமைச் சர் ராஜ்நாத்சிங், நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி ஆகி யோர்  பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில்,நாடாளுமன்ற உறுப் பினரும்,  பாஜக தலைவருமான அமித்ஷா, சுதேசி ஜாக்ரான் மஞ்ச், பாரதிய மஸ் தூர் சங்கம் ஆகிய அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்டஆர்.எஸ்.எஸ்.அமைப்பினர் கலந்துகொண்டு ஆலோசனைக்கான கருத்துகளை அளித்துள்ளனர்.

2018ஆம்ஆண்டில்நடை பெறுகின்ற மாநில சட்டப் பேரவைத் தேர்தல்கள் மற்றும் 2019ஆம் ஆண்டுக்கான மக்கள வைத் தேர்தல் ஆகியவற்றை எதிர்கொள்ளும்வகையில்மத்திய அரசு எடுக்கவேண்டிய நடவடிக் கைகள், பொருளாதாரப் பிரச்சினை கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக பாஜக தலைவர்கள் உறுதி செய்துள்ளனர் என்று 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

அரசமைப்புச்சட்டத்தின்கீழ் உறுதிமொழிஎடுத்துபதவியேற் பவர்கள் அரசு சார்ந்த செயல் பாடுகளை, திட்டங்கள்குறித்து முறையாக சட்டமன்றம், நாடா ளுமன்றத்தில் முன்வைப்பதற்கு முன்னதாக எவரிடமும் கசிய விடாமல் அரசின் ரகசியம் காக்கப்படும் என்று எடுத்த உறுதிமொழிக்கு மாறாக மத்திய அமைச்சர்களே ஆர்.எஸ்.எஸ்-. அமைப்பினருடன் ஆலோசனை பெறுகிறார்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டஉறுப்பினர்களிடம்ஆலோ சிக்காமல், அரசு செயல்பாடுகள் குறித்து, நிதிநிலை அறிக்கை யில் மேற்கொள்ளப்பட வேண்டி யவைகுறித்து பாஜகவின் கொள்கைவழிகாட்டியாகஅடை யாளம்காட்டி, வகுப்புவாதங்களை முன்னிறுத்தும்ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருடன் ஆலோ சிப்பதுதான் மோடியின் பாஜக வின் குறைந்த ஆளுமை, சிறந்த நிர்வாக வளர்ச்சியா எனும் கேள்வி எழத்தான் செய்கிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner