எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பிற மதத்துக்கு மாறியவர்களை திரும்ப இந்து மதத்துக்கு மாற்றும் 'கர் வாப்சி' திட்டமா?

புதுடில்லி, டிச.30 மக்களவைத் தேர்தலில் 2014ஆம் ஆண்டில் பெரும்பான்மையுடன் ஆட்சிப்பொறுப்பேற்ற மோடியின் பாஜக அரசு, நாடுமுழுவதும் இந்துத்துவா வன் முறையாளர்களின் வன்செயல்களை ஊக்குவித்து வருகிறது.

மதம் மாறிய சிறுபான்மை கிறித்தவர்கள், இசுலாமியர்களை ‘தாய் மதம் திரும்புதல்’ எனும் 'கர் வாப்சி' எனக்கூறிக்கொண்டு அவர்களை மீண்டும் இந்துமதத்தில் இணைப்பதை ஒரு திட்டமாகக் கொண்டு இந்துத்துவா சக்திகள் செயல்பட்டு வரு கின்றன. அதன்மூலமாக நாட்டில் உள்ள மத சிறுபான்மையர்களுக்கு எதிராக பெரும் அச்சுறுத்தல்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
ஆசைவார்த்தை அல்லது அச்சுறுத்தல்

ஆட்சி,அதிகாரங்களைக்கொண்டுசலு கைகள் அளிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறுவது அல்லது அச்சுறுத்தல்களின்மூலமாக ‘கர் வாப்சி’ திட்டத்தை செயல்படுத்துவதைத் தொடங்கிய விசுவ இந்து பரிசத் தற் பொழுது அத்திட்டம் தொடர்ச்சியாக செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளது.

இந்துக்கள் அல்லாதவர்களை இந்துக் களாக மாற்றுகின்ற 'கர் வாப்சி' திட்டத்தைத் தீவிரப்படுத்த உள்ளதாக விசுவ இந்து பரிசத் கூறுகிறது.

சுரேந்திர ஜெயின்

விசுவ இந்து பரிசத் அமைப்பின் மத்தியக் குழு மற்றும் நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்றபின்னர்  இணைப் பொதுச்செயலாளர் சுரேந்திர ஜெயின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

'மக்களைமதம்மாற்றுவதற்காக, குறிப்பாக பழங்குடி மக்களுக்குக் கிறித்தவ மிஷனரிகள் பணத்தை வாரி இறைக்கின்றன. அதன்மூலமாக, பழங்குடி மக்கள் தங்களின் பண்பாடு மற்றும் கலாச்சார அடையாளங்களை இழக்கிறார்கள்’’ என்று பழி சுமத்துகிறார்.

விசுவ இந்து பரிசத் அமைப்பின் தீர் மானத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

“இந்துக்கள் கட்டாயத்தின்பேரிலும், ஏமாற்றப்பட்டும், அச்சுறுத்தப்பட்டும் மதம் மாறுகிறார்கள். அவர்களைச் சுற்றி அச்சம் மற்றும் குழப்பமான சூழல்கள் நிலவி வருகின்றன’’ என்கிறது தீர்மானம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சுவாமி லட்சுமானந்தா கொலைவழக்கில் கொலையாளிகள் விடுவிக்கப்பட்டதற்கு வி.எச்.பி. கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

மேலும் இணை பொதுச்செயலாளர் சுரேந்திர ஜெயின்  கூறும்போது,

“ஒடிசாமாநிலத்தில்கந்தமால்மாவட் டத்தில் பெருமளவிலான மத மாற்றங் களின்போது,அதைமுறியடித்தவர் லட்சுமானந்தா. அவர் கடுமையாகதாக்கப் பட்டும் உயிரோடிருந்தார். அவர் கூலிப் படையாலேயே கொல்லப்பட்டார். அதன் காரணம் வெளிப்படையானது’’ என்றார்.

(உண்மைஎன்னவென்றால்,அந்தக் கொலைக்கு நக்சலைட்டுகள் பொறுப் பேற்றனர். உண்மை இவ்வாறு இருந்தும், சிறுபான்மையினர்மீது இந்தக் கூட்டம் பழிபோடுவதைக் கவனிக்கவேண்டும்).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner