எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

நள்ளிரவில் இந்துக் கோவில்களைத் திறக்கலாமா? கூடாதா? என்ற ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விடயம் சென்னை உயர்நீதிமன்றம் வரை சென்று நாறியுள்ளது.

நள்ளிரவில் இந்துக் கோவில்கள் திறப்பதைத் தடை செய்ய முடியாது என்று உயர்நீதிமன்றம் கூறிவிட்டது.

அர்த்தமுள்ள இந்து மதம் பற்றி “அழகாகவே’’ பேசுகிறார் கள் - அடேயப்பா சண்ட மாருதமே செய்கிறார்கள்.. அந்த அர்த்தமுள்ள இந்து மதத்தில் ஒரு கட்டுப்பாடும் வரையறுக் கப்பட்ட நியதிகளும், உரிய தலைமையும் இருக்குமேயா னால் இந்த நிலை ஏற்பட்டு இருக்குமா?

இந்து முன்னணி ராமகோபா லன் ஒவ்வொரு ஆண்டும் கரடியாய்க் கத்துகிறார், காஞ்சி சங்கராச்சாரியாரும் தன்பங் குக்குத் திருவாய் மலர்கிறார். பி.ஜே.பி. முந்திரிக்கொட்டை களும், ‘பிலாக்கணம்‘ பாடுகின் றன.

நள்ளிரவில்இந்துக் கோவில் களைத் திறந்து வைப்பது ஆகமங்களுக்கு விரோதம்.

சிவராத்திரியின்போது சிவன் கோவில்களையும், வைகுண்ட ஏகாதசியின்போது வைணவக் கோவில்களையும் திறந்து வைக்கலாம்.

மற்ற நேரங்களில் நள்ளிர வில் திறந்து வைப்பது ஆகாது. ஆகமத்துக்கு எதிரானது என்று சொல்லிச் சொல்லிப் பார்த்தாகி விட்டது; எழுதி எழுதிப் பார்த் தாகிவிட்டது. பிள்ளை பிழைக்க வேயில்லை; விளக்கெண் ணெய்க்குத்தான் கேடாயிற்று!

என்றாலும், ஏன் ஆங்கிலப் புத்தாண்டில் நள்ளிரவில் இந் துக் கோவில்களைத் திறந்து வைக்கிறார்கள்?

எல்லாம் பிசினஸ்தான். அர்ச்சகப் பார்ப்பனர்களின் கல் லாப்பெட்டி நிரம்பி வழியத்தான். பக்தி என்பது பிசினஸ் ஆகி விட்டது. வர்த்தக மனப்பான்மை காணப்படுகிறது என்று அவா ளின் லோகக் குரு ஜெயேந்திர சரசுவதி (1976 மே திங்கள்) காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அகில இந்து மாநாட்டில் கூறினாரே - அதனை இந்த இடத்தில் நினைத்துக் கொள்ளவேண் டியதுதான்!

அதைவிட வாட்ஸ் அப்பில் இதுகுறித்து ஒரு செய்தி:

‘‘முன் பல் உடைந்தவனோ உடல் பருத்தவனோ, தொந்தி உள்ளவனோ பூஜை செய்யத் தடை; மனைவியை இழந்த வனுக்கும் தடை - இதெல்லாம் ஆகம விதி. அவனே போடு வான், அவனே மீறுவான்.

நடைமுறையிலோ தேவ நாதன் (காஞ்சிபுரம்) குருக்கள் போன்றோர் கருவறையிலேயே கலவி செய்கிறார்கள்; ஆகம மாவது, மண்ணாங்கட்டியாவது - தட்டுல துட்டு மட்டும் விழுந்தா போதும்னு மனு நீதி யையே துணைக்கழைப்பார் கள்’’ இதுதான் அந்த வாட்ஸ் அப் தகவல்.

ஆன்மீகம், ஆகமம் எல் லாம் அசல் அக்கப் போர்கள் தான்!

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner