எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

டில்லி, ஜன.1  நாடு முழு வதும் அனைத்து விதமான பரிவர்த்தனைகளுக் கும் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித் துள்ளது. இதையடுத்து, ஆதார் அட்டை எடுக்கும் பணிகள் நாடு முழுவதும் விரைவுபடுத்தப் பட்டு நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஆதார் தகவல்கள் அவ்வப்போது வெளியாவதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. தனி நபரின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஆதார் தகவல்கள் வெளியாகி வருவதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஆதார் விவ ரங்களைப் பதிவு செய்வதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக அய்ம்பதாயிரம் ஊழியர்கள் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாநி லங்களவையில்  மத்திய இணையமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானம் தெரிவித்துள் ளார். ஏற்கெனவே ஆதார் குறித்து கருத்து தெரிவித்துள்ள  உச்சநீதிமன்றம்,  வாடிக்கையா ளர்கள் விரும்பினால் மட்டுமே விவரங்களைப் பெற்றுக் கொள் ளலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில்  மாநிலங்கள வையில் பேசிய மத்திய இணை யமைச்சர் அல்போன்ஸ்கண்ணந் தானம், ஆதார் விவரங்கள் பதிவு செய்வதில் விதிமீறல்கள் நடைபெற்றது உண்மைதான், மேலும் ஆதார் பதிவுகளை பாதுகாப்பதில் பல்வேறு குளறு படிகள் உள்ளன என்பதை ஒப்புக் கொண்டார். அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட அதி ரடி நடவடிக்கைகள் காரணமாக அய்ம்பதாயிரம் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மத்திய அமைச்சரின் இந்த ஒப்புதல் பேச்சு, நாட்டு மக்க ளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner