எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ராமர் கோயில் மட்டும்தான்...

அயோத்தியில் ஒருபோதும்

மசூதிக்கு இடமில்லையாம்

விசுவ இந்து பரிசத் கொக்கரிப்பு

புவனேசுவர், ஜன.1 -அயோத்தியில் மசூதி எதையும் கட்டுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது; அங்கு ராமர் கோயில் மட்டுமே கட்டப்படும் என்று விசுவ இந்து பரிசத் செயல் தலைவர் பிரவீண் தொகாடியா கொக்கரித்துள்ளார்.ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் விசுவ இந்து பரிசத்தின் மத்திய நிர்வாக அறங்காவலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று செயல் தலைவர் பிரவீண் தொகாடியா மேலும் கூறியிருப்பதாவது:அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு கோயில் கட்ட வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை. இந்த விருப்பம் 450 ஆண்டுகள் நிறைவேறாமல் இருந்ததற்கு மொகலாயர்களின் ஆட்சி காரணம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது; ஆனால், நாடு சுதந்திரமடைந்த பிறகும், ராமர் கோயில் கட்ட முடியாது என்றால், அதை ஏற்க முடியாது.அயோத்தியில் உடனடியாக ராமர் கோயில் கட்டப்பட வேண் டும் என்பதுதான் கோரிக்கை. இதற்கான தடைகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும். அயோத்தியில் ராமர் கோயில் மட்டுமே கட்டப்பட வேண்டும். அந்த பகுதியில் புதிதாக மசூதி கட்டுவதை ஏற்க முடியாது.இவ்வாறு தொகாடியா கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner