எழுத்துரு அளவு Larger Font Smaller Font

செங்கல்பட்டு,ஜன.2  நடிகர் ரஜினிகாந் தின் அரசியல் பிரவேசம் பி.ஜே.பி.யினுடைய மாய மானாக அமைந்துவிடக்கூடாது என் றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

செங்கல்பட்டில் அன்று  (31.12.2017)  திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர் களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

செய்தியாளர்: நடிகர் ரஜினிகாந்த் அரசிய லுக்கு வருவேன் என்று அறிவித்திருக்கிறாரே?

தமிழர் தலைவர்: ஊடகங்களுக்கு வெற்றி! ஏனென்றால், ஊடகங்கள்தான் தொடர்ந்து அவரை விரட்டி விரட்டி வந் தார்கள். யார் வேண்டுமானாலும் அரசிய லுக்கு வரலாம். என்ன கொள்கை? என்ன லட்சியம்? யாரை எதிர்த்து  நிற்கிறார்? எந்தக் கொள்கையில் செயல்படுகிறார்? என்பதை அவர் முழுமையாக அவர் தெளிவுபடுத் தட்டும். அதன்பிறகு, அதனை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? என்கிற முடிவை எங்களைப் போன்றவர்கள் எடுப் பார்கள்.

இது பெரியார் பூமி - பகுத்தறிவு பூமி - திராவிடர் இயக்க மண் - இந்த மண்ணில், அதனுடைய அடிப்படைக் கொள்கை களுக்கு விரோதமாக யாராக இருந்தாலும் நிச்சயமாக வேரூன்ற முடியாது. ஒருவேளை, இது பி.ஜே.பி.யினுடைய மாயமானாக அமைந்து விடக்கூடாது என்பது தான் மிக முக்கியம். அதனை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.

செய்தியாளர்: ஆன்மிகக் கொள்கை என்கிறாரே ரஜினிகாந்த்?

தமிழர் தலைவர்: ஆன்மிகக் கொள்கை என்றால், அதுதான் மாய மான்.

- இவ்வாறு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner