எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, ஜன.2  டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் வகுத் தளித்த அரசியலமைப்புச் சட் டத்தை விமர்சிப்போர் மக்கள் பிரதிநிதியாகும் தகுதியற்ற வர்கள் என்று முதல்வர் சித் தராமையா தெரிவித்தார். பெங் களூரு பத்திரிகையாளர் சங்கத் தின் சார்பில், பெங்களூரு கப்பன் பூங்காவில் உள்ள சங்க வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், தனக்கு வழங்கப்பட்ட ஆண்டின் சிறந்த மனிதர் விருதைப் பெற்ற பின்பு அவர் பேசியதாவது:

கருநாடகத்தின் தலைசிறந்த முதல்வராக விளங்கிய டி.தேவ ராஜ் அர்சு§டன் என்னை சிலர் ஒப்பிட்டு பேசி வருகின்றனர். அவருடன் என்னை ஒப்பிட முடியாது. நான் அரசியலுக்குத் தற்செயலாக வந்தவன். நான் வழக்குரைஞராக வேலை செய்த போது, வட்ட வளர்ச்சி வாரியத்தின் தேர்தலில் போட்டியிட ஊர் மக்கள் சேர்ந்து என் தந்தையின் ஒப்பு தலைப் பெற்றனர். அப்போது வழக்குரைஞர் வேலை செய்து சம்பாதித்திருந்த பணத்தில் தேர்தல் செலவு செய்து, அத் தேர்தலில் வென்றேன். அதன் பிறகே நான் அரசியலில் வளர வேண்டும் என்ற ஆசை என் தந்தைக்கு வந்தது. பின்னர், மக்களவைத் தேர்தலில் போட் டியிட்டு படுதோல்வி அடைந் தேன். அதன்பிறகு, சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டபோது மக்கள் என்னை ஆதரித்து வெற்றி பெறச் செய் தனர். என்னையும் எனது அர சையும் யதார்த்தமாக விமர்சிப் பதை வரவேற்கிறேன்.

நான் நம்பிய சமூக நீதி, பகுத்தறிவுக்கு உகந்த வகையில் ஆட்சி நடத்தி வருகிறேன். நமது நாட்டின் ஜாதிய கட்ட மைப்பு, பழக்க வழக்கங்கள், பண்பாடு, சமூக அமைப்பு போன்ற பல்வேறு கூறுகளை ஆராய்ந்துதான் அரசமைப்புச் சட்டத்தை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் வகுத்து தந்தார். ஆனால், ஒரு சிலர் அம்பேத் கரின் அரசமைப்புச் சட்டத்தை விமர்சித்து வருவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அம்பேத்கர் தந்துள்ள அரச மைப்புச் சட்டத்தைச் சாடு வோர் மக்கள் பிரதிநிதிகளாகும் தகுதியற்றவர். ஜாதியத்தை உயர்த்தி பிடிப்பது அரசியல மைப்புச் சட்டத்துக்கு செய்யும் மிகப் பெரிய துரோகமாகும் என்றார் அவர். நிகழ்ச்சியில், நடிகர் பிரகாஷ்ராஜூக்கு ஆண் டின் சிறந்த மனிதர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner