எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அனைத்துக்கும் வேதங்களே தீர்வாம்!

ராஜஸ்தான் பாஜக அரசில் வேதங்கள் ஆராய்ச்சிக்கு நிறுவனம் தொடக்கமாம்

ஜெய்ப்பூர்,ஜன.3பன்னாட்டளவில்அறி வியல் ரீதியில் இன்னமும் முற்றிலும் குணப்படுத்த முடியாமல் இருப்பதாக காணப்படுகின்ற நோய்கள், நீரிழிவு நோய், இரத்த அழுத்த நோய் அல்லது புற்றுநோயா? எந்த நோயாக இருந்தாலும் முழுவதுமாக குணப்படுத்துவதற்கு வேதங்கள்தான் தீர்வு என்று ராஜஸ்தான் மாநில பாஜக அரசின் ஆராய்ச்சி(?) நிறுவனம் அமைக்கப்படுகிறதாம்.

கடந்த 2005 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் மாநில அரசு  Ôஇந்து வேதங்களில் அறி வியல்Õ என்பது குறித்து ஆராய்ந்திட, நாட்டிலேயே முதல் முதலாக ஓர் ஆய்வு நிறுவனத்தை அமைத்தது.

ஜகத்குரு ராமானாந்தாச்சார்யா ராஜஸ் தான் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்படும்வகையில்,  மந்திரங்களில் அறிவியல் ஆய்வு நிறுவனம் (Research Institute of Mantra Sciences-RIMS) அல்லது ராஜஸ்தான் மந்திர பிரஸ்தான் எனும் பெயரில் ஆய்வு நிறுவனம் அமைக்கப்பட்டது.

ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆசிரியர்கள் உள்பட  பல்வேறு பணியிடங்களில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்குமாறு கோரியது.

2005ஆம் ஆண்டில் அப்போதைய கல்வித்துறை அமைச்சர் கான்ஷியாம் திவாரி ஆராய்ச்சி நிறுவனத்தை அமைக் கும் அறிவிப்பை வெளியிட்டார்.

இந்து மதத்தின் சட்ட நூலாக கரு தப்படுகின்ற மனுஸ்மிரிதியில் கூறப் பட்ட வாசகமான Ôசர்வம் வேதாத் பிர சித்தியாதிÕ வேதங்களிலேயே அனைத் துக்கும் தீர்வு எனும் பொருளில் சொற் றொடர்களை கூறியே, ஆராய்ச்சி நிறுவன அறிவிப்பை திவாரி வெளியிட்டார்.

வசுந்தரா ராஜே தலைமையிலான அரசு 2015-2016 நிதியாண்டில் ஜகத்குரு ராமானாந்தாச்சார்யாராஜஸ்தான்சமஸ் கிருபல்கலைக்கழகக்வளாகத்தில் ஆராய்ச்சி நிறுவனக் கட்டடப்பணிகளுக் காக ரூ.24 கோடியை ஒதுக்கியது.

தற்பொழுது ஆள்சேர்ப்பு வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டிருக்கின்றன. 2018 ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கிவிடும் என்று கூறப்படுகிறது.

மந்திரங்களில்அறிவியல்ஆய்வு நிறுவனத்தின் புரவலரும், ராஜஸ் தான் சமஸ்கிருத அகாடமியின் தலை வருமாகிய ஜெயா தேவா கூறியதாவது:

“பாரதம் இழந்துவிட்ட பழைமை யான ஞானத்தை மீட்கின்ற வகையில் நிறுவனம் செயல்படும். வேதங்கள், உபநிடதங்கள், ஆரண்யாக்கள் மற் றும்பழைமையானவேதங்கள்பன் னாட்டளவில் அனைத்து கேள்விகளுக் கும் பதில் அளிப்பவையாக உள்ளன. ஆயுர்வேதம், தனுர்வேதம், கந்தர்வ வேதம் ஷில்பா வேதம் ஆகிய பகுதி கள்குறித்த ஆய்வுகள் தொடக்க நிலையில் இருந்து வருகின்றன’’ என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner