எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தங்கம் கொள்ளையோ கொள்ளை!

காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் ஒரிஜினல் சிலை எங்கே?

இப்பொழுது இருப்பது போலியா - காவல்துறை அதிரடி தகவல்

காஞ்சிபுரம், ஜன.3 காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர்கோவில் மூல வர் சிலையில் மோசடி நடந்தி ருக்கிறது. இப்பொழுது இருப்பது டூப்ளிகேட்டா? சிலையில் உள்ள தங்கம் எங்கே? என்று காவல்துறை அதிரடியாகக் கேட் டுள்ளது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், புதிய உற்சவர் சிலை செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் நேற்று மேற்கொண்ட ஆய்வில் இது தெரிந்தது.

ஒன்பது பேர்மீது

வழக்கு பதிவு

காஞ்சிபுரத்தில் உள்ள  ஏகாம் பரநாதர் கோவில், பல நூற்றாண்டு கொண்டது. இங்குள்ள, பழைய உற்சவர் சிலை சிதிலம் அடைந்ததாகக் கூறி, புதிய சிலை செய்ய,அறநிலையத்துறை முடிவு செய்தது. ‘பழைய உற்சவர் சிலை, 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அதில், 75 சதவீதம் தங்கம் உள்ளது; பல கோடி ரூபாய் மதிப்பு கொண்டது’ என, காலம் காலமாக கூறப்பட்டு வந்தது. கடந்த, 2016 இல் செய்யப்பட்ட, புதிய உற்சவர் சிலை மற்றும் அம்பாள் சிலையில், 5.45 கிலோ தங்கம் சேர்க்கப்பட்டதாக, கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அந்த அளவுக்கு அதில் தங்கம் இல்லை என்றும், சிலை செய்யப்பட்டதில், முறைகேடு நடந்துள்ளதாகவும் கூறி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் வழக்கு தொடர்ந்தார்.உயர்நீதிமன்றநீதிபதி உத்தரவு படி, கடந்த, டிச.10 இல், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அய்.ஜி., பொன்.மாணிக்கவேல், காஞ்சிபுரத்தில் விசாரணை நடத்தினார். அதன்பின், தலைமை ஸ்தபதி முத்தையா, கோவில் செயல் அலுவலர் முருகேசன், சிலையை செய்த மாசிலாமணி மற்றும் ஸ்தானிகர்கள் ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே, காஞ்சிபுரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வீரமணி, டி.எஸ்.பி., முகிலன் முன்னிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., ரகுபதி தலைமையில், 12 காவல் துறையினர், ஏகாம்பரநாதர் கோவில் சிலைகளை நேற்று ஆய்வு செய்தனர்.

ஏகாம்பரநாதர்பழையஉற்சவர் சிலை உட்பட நான்கு சிலை களை, நவீன கருவிகளுடன் பரிசோதித்தனர். அப்போது, திடுக் கிடும் தகவல் தெரிய வந்தது. விலை மதிக்க முடியாதது என கருதப்பட்ட, பழைய சிலையிலும் தங்கம் கிடையாது; புதிதாக செய்யப்பட்ட சிலையிலும், போதிய அளவு தங்கம் இல்லை என்பது தெரிய வந்தது. இதனால், விலை மதிப்பில்லாதது என கருதப்பட்ட உண்மையான சிலை எங்கே? அந்த சிலை தான் என கருதப்படும், பழைய உற்சவர் சிலையும் போலி தானா? என, பக்தர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

தகுந்த நடவடிக்கை

இது குறித்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வீரமணி கூறிய தாவது:

நேற்று நடந்த ஆய்வில், பழைய சிலைகள் இரண்டு, புதிதாக செய்யப்பட்ட உற்சவர் சிலை மற்றும் அம்மன் சிலை என நான்கிலும் தங்கம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கையாக, தவறு எங்கு நடந்துள்ளது... யார் செய்தனர் என்பதை கண் டறிவோம். விசாரணைக்கு பின் தகுந்த நடவடிக்கை பாயும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner