எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாட்டில் பொய்யும், புரட்டும் அநாகரீக மானப் பேச்சுக்களும், திட்டமிட்ட சூது வாய்ந்த நடவடிக்கைகளும் நடைபெறு கின்றன.  ஆட்சி நம் கையில் என்ற திமிர் தலை விரித்தாடுகின்றது. மதவெறித்தனம் தனது முழு சூழ்ச்சியையும் கையாளுகின்றது.

அதை எதிர்த்து அமைதியாக, ஆழமான கருத்துக்களை மக்கள் முன் எடுத்து வைத்து நடந்ததுதான் உலக நாத்திகர் மாநாடு. பண பலமோ, ஆட்சி பலமோ இல்லை. கொள்கைக் காக உழைக்கும் நன்றி எதிர்பார்க்காதத் தொண்டர் படை. கொடுத்துக் கொடுத்து அசந்தவர்களே மீண்டும் கொடையளிக்கின்றனர். உழைத்து மெருகேற்றியவர்கள் வயது, வளமை பாராது உழைத்து மாநாட்டை வெற்றி பெற வைத்துள்ளனர்.

ஆணி வேர்- பெரியார் ! ஆழமான வேரின் பெரு மரமாக அய்யா ஆசிரியர் தலைமையில் தொண்டர் படை! விழுதுகள் பல தலை யெடுத்து வீரமுழக்கம் செய்கின்றனர். உலக நாத்திகர்களும், பல மாநில நாத்திகர்களும் மனித நேயமே வாழ்க்கை, அதற்கு மதம் ஒழிந்த நாத்திக வாழ்வே நல் வாழ்வு என்று முழங்கினர்!

இது ஒரு திருப்பு முனை. மதவெறியர்கள் பொறாமைப்பட்டுப் பொங்குகின்றனர். நம்ம வர்களோ இன்னும் தன்னலம் கருதி வெளியே வராமல் வேடிக்கைப் பார்க்கின்றனர். பெரிய மதவாதம் எனும் நோய் நம்மை ஆசை காட்டி மோசம் செய்யப்போகின்றது என்பதை அனை வரையும் உணர வைப்போம். நோய் நம்மை மட்டுமல்ல, நமது இனத்திற்கே குறி வைத்துள்ளது என்பதைப் புரிய வைப்போம்.

இந்திய நாத்திகர்களையும், உலக நாத்தி கர்களையும் இணைத்துப் பெரியாரின் மனித நேயத்தைப் புரியச் செய்வோம்! உலகெங்கும் கொண்டு செல்வோம். 2019 இல் அமெரிக்காவில் சந்திப்போம்.

வாழ்க பெரியார் ! வளர்க பகுத்தறிவு !

சோம.இளங்கோவன்

பெரியார் பன்னாட்டமைப்பு அமெரிக்கா

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner