எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தினகரன் கருத்து

திராவிட மண்ணில் ஆன்மிக அரசியல் சாத்தியப்படாது.

- தூத்துக்குடியில்

டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ., பேட்டி


இந்தியர்கள் முதலிடம் - எதில்?

ஆன்டிபயாடிக் மாத்திரைகள் சாப்பிடுவதில் இந்தியர் கள் முதலிடமாம்! ஆண்டிபயாடிக் மாத்திரைகளை அதிகம் சாப்பிடுவதால் உலகெங்கும் மரணிப்பவர்கள் ஏழு லட்சம் பேர். இது 2030 இல் ஒரு கோடியாக உயரும் என்று உலக சுகாதார நிறுவனம் (கீபிளி) கூறுகிறது. 2001 ஆம் ஆண்டில் இந்தியர்கள் சாப்பிட்ட இத்தகு மாத்திரைகள் 800 கோடி என்றால், 2010 இல் 62 விழுக்காடு அதிகரித்து 1,290 கோடியைத் தொட்டுள்ளது.


இரட்டை வேடம்!

மாட்டிறைச்சி பிரச்சினையில் மத்திய பி.ஜே.பி. அரசு இரட்டை வேடம் போடுகிறது. மத்தியில் ஒரு நிலைப் பாட்டையும், கோவா மாநிலத்தில் வேறொரு நிலைப் பாட்டையும் எடுத்து வருகிறது.

- சாந்தாராம் நாயக்,

கோவா காங்கிரசு தலைவர்


இலவசம்

தமிழ்நாட்டில் இலவசப் பேருந்து அட்டை வைத் திருப்போர் எண்ணிக்கை 40 லட்சம்.


இன்றைய ஆன்மிகம்?

எந்த ஊர் கோவிலுக்குச் செல்லவேண்டும்?

திருமணஞ்சேரி என்ற ஊரில் உள்ள கோவிலுக்குச் சென்றால், உடனே திருமண பாக்கியம் கிடைக்குமாம். அந்தத் திருமணஞ்சேரியிலேயே திருமணம் ஆகாத ஆண்களும், பெண்களும் இருக்கிறார்களே- அவர்கள் எந்த ஊர்  கோவிலுக்குச் செல்லவேண்டும்?


இந்நாள்...இந்நாள்...

1974 - யாழ்ப்பாணத்தில் 4 ஆவது உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில் 9 தமிழர்கள் படுகொலை

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner