எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

11.1.2018 "புரட்சி பெரியார் முழக்கம்" - "திராவிடர் விடுதலை கழகம்" வார ஏடு - முழக்கம் 52இல், "பெரியாரின் 'குடிஅரசு' தொகுதிகளை வெளியிட்டதற்கு கழகத்திடம் ரூபாய் பதினைந்து லட்சம் இழப்பீடு கோரி மீண்டும்

கி. வீரமணி வழக்கு" என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இந்த தலைப்பு ஏதோ முன்பு ஒரு வழக்கு தொடர்ந்ததாகவும், இப்போது இரண்டாவது வழக்கு தொடரப்பட்டதாகவும் செய்தி வெளியிடப் பட்டுள்ளது. இந்த செய்தி முற்றிலும் தவறானது.

மேலும் திசை திருப்பக் கூடிய ஒரு செய்தியாகும். 2008இல் தொடரப்பட்ட வழக்குதான் இப்பொழுது விசாரணைக்கு வந்து கொண்டுள்ளது. எனவே புதியதாக ஒரு வழக்கு மீண்டும் தொடரப்பட்டதாக வெளிவந்த தவறான செய்தியானது பொது மக்கள் பார்வைக்கு வெளியிடப் பட்டுள்ளது கண்டிக்கத்தக்கதாகும். மேலும் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி இதுநாள் வரை பெரியார் திராவிடர் கழகத்தினர் கணக்கு விவரம்  தாக்கல் செய்ய வில்லை. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காத இவர்கள் வழக்கு சம்பந்தமான தவறான செய்தியை வெளியிடுவது எவ்வகையில் நியாயம்? இனிமேலாவது தவறுகளை திருத்திக் கொண்டு சரியான உண்மையான செய்திகளை வெளியிடுவார்கள் என்று நம்புகிறோம்.

- த. வீரசேகரன்
தலைவர்
திராவிடர் கழக சட்டத்துறை

சென்னை
11.1.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner