எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பிரதமர் மோடி ஆட்சியில் இந்துத்துவா நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்

மதச்சார்பற்ற அரசுக்கு - அரசமைப்புச் சட்டத்திற்கு 'அரோகரா - அரோகரா'!

இன்று ஒரு நாள் (11.1.2018) செய்தித்தாள்களில் வந்துள்ள செய்திகளை காணுங்கள்

 

1.            மத்தியக் கல்வி அமைச்சகத்தின் கீழ் நடை பெறும் 'கேந்திரிய வித்தியாலயா' பள்ளிகளில் வகுப்புத் தொடங்குமுன் ஹிந்து கடவுள் வணக்கம் கைகூப்பி தொழுதலோடு, பிரார்த் தனைப் பாட்டு ஹிந்தி சமஸ்கிருதத்தில் என் பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்  பெற்றோர் ஒரு பொது நல வழக்கு - உச்சநீதிமன்றம், மத்திய அரசுக்கு நோட்டீசு!

2.            காங்கிரசு ஹிந்து எதிர்ப்புக் கொள்கை உடைய கட்சி - அது சிறுபான்மையினருடன் சார்ந்தது, கருநாடகத்தில் அமித்ஷாவின் மதவெறித் தூண்டல் பேச்சு.

3.            அரியானாவில் உள்ள பா.ஜ.க. அரசும், அதன் முதல்வரும் பகவத் கீதை விழா (சர்வதேச கீதோ மகோத்சவ்) நடத்தி, விலை உயர்ந்த பதிப்பாக பகவத் கீதை பிரதிகளை  - 10 பிரதிகளை 3.8 லட்ச ரூபாய் அரசு பணத்தில் வாங்கியுள்ளதை எதிர்த்து துஷ்யத் சவுத்தாலா என்ற லோக்தள எம்.பி. விசாரணை நடத்திட ஆடிட்டர் - தணிக்கை பெரிய அதிகாரியை (CAG) அணுகியுள்ளார்.

மக்கள் வரிப்பணத்தில் மதச் சார்பற்ற அரசு இப்படி பச்சை ஹிந்துத்துவ அரசாக நடைபோடுகிறது.

4.            ஆண்டாள் பற்றிய கவிஞர் வைரமுத்து கட்டுரைக்கு மறுப்பினை காரைக்குடி எச். இராஜா என்ற நபர் மிகவும் நரகல் நடை வசைகளை - கவிஞர் மீதும், திமுக தலைவர் கலைஞர்மீதும் வரம்புமீறி  பொழிந்தது கண்டு பலரும் கொதித்துள்ள நிலையில், பா.ஜ.க. தலைமை இந்த நபரை அடக்கி வைக்க முன்வர வேண்டும். இவர் தேசிய செயலாளர் பொறுப்பில்.... பண்பாட்டை இழந்த பதர்களைக் கொண்டதா இக்கட்சி?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner