எழுத்துரு அளவு Larger Font Smaller Font

"மயிலாடுதுறையில் வசிக்கும் எனது மூத்த சகோதரியின் மகளான ஜெ.மேகலா இரண்டு நாட் களுக்குமுன் எனது ‘வாட்ஸ் அப்'பிற்கு ஒரு ‘பரபரப்பான' செய்தியை அனுப்பியிருந்தார். சென்ற வாரத்தில் ஒரு நாள் அவரும், அவரது கணவரும் சிதம்பரம் நட ராசர் கோயிலுக்குச் சென்றி ருந்தபோது நடந்த சம்ப வத்தைப் பற்றிய செய்தி தான் அது!

அவரே அதுபற்றி விவரிக்கிறார்: "நானும், எனது கணவர் இந்திர ஜித்தும், சென்ற வாரம் சிதம் பரம் நடராஜர் கோயிலுக்கு சென்றிருந்தோம். அர்ச் சனை பண்ண அய்யர் 300 ரூபாய் கேட்டார். நான் வெளியில் வந்து (அதாவது கருவறையில் இருந்து கொஞ்ச தூரத்தில்) தேங் காயை நானே உடைத்து ‘சாமி'க்கு நேரே காட்டிவிட்டு வந்தேன். அங் குள்ளவர்கள் ‘ஆ.. ஊ..' என கத்தினார்கள். அய்யரும் என்னை முறைத் துப் பார்த்தார். எனக்குள் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.

ஆனால் நான் எல்லோ ரிடமும் என்ன சொன்னேன் என்றால், ‘சாமிகிட்ட வேண் டிக்கிட்டேன் தேங்காய் உடைப் பதாய். அய்யர் தேங்காய் உடைக்க 300 ரூபாய் கேட் கிறார். என்னிடம் பணம் இல்ல. ஆனா தேங்காய் உடைக்காமல் போனா தெய்வ குத்தம் ஆகிவிடும் அல்லவா? அதனால் நானே உடைத்துவிட்டேன்' என் றேன். உண்மையில் நான் ‘சாமி'கிட்ட அப்படி வேண் டிக் கொள்ளவில்லை. என் கணவர் வாங்கிக் கொண்டு வந்த தேங்காயை உடைக்க அய்யர் காசு கேட்டதால் நானே உடைத்து விட்டேன் அவ்வளவுதான்.

என்னைப் பார்த்துவிட்டு வேறு ஒருவரும் தேங்காயை அவரே உடைத்துவிட்டு வந்து, ‘அய்யருக்கு ஏன் தண்டமாக 300 ரூபாய் கொடுக்க வேண்டும்' என்றார். இந்த சம்பவம் சிறிதுநேரம் கோயிலில் பர பரப்பை ஏற்படுத்திவிட்டது" என்று அந்த ‘வாட்ஸ் அப்' தகவலில் விவரித்துள்ளார்.

கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் இவரைப் பின்பற்றத் தொடங்கினால், பார்ப்பன ரின் வரு வாய் மட்டுமல்ல;  அவாளின் கொழுப்பும், கொட்டமும் அடங்கிவிடும்."

சீர்காழி  கு. நா. இராமண்ணா

இதனைப் படிக்கும் பக்தி மான்கள் ஒன்றைச் சிந்திக்க வேண்டும்; பக்தர்களுக்கும் - கடவுளுக்கும் இடையே தரகனாக இருந்து அர்ச்சகர் பார்ப்பான் சுரண்டல் தொழிலை அமோகமாக நடத்துகிறான் என்பது புரிய வில்லையா?

உடைத்தது தேங்காயை அல்ல - பார்ப்பன சுரண் டலை!

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner