எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 


கவிஞர் வைரமுத்து அவர்களின் கருத்துரிமைக்கு எதிராக, பார்ப்பனர் சங்கத்தவர் - மடிசார் மாமிகள் உள்பட பலரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை சென்னை - மயிலாப்பூர் மாங்கொல்லை, சிறீரங்கம், சிறீவில்லிப்புத்தூர் போன்ற பல இடங்களில் திட்டமிட்டு நடத்திய செய்திகளும், படங்களும் பல நாளேடுகளில் வெளிவந்துள்ளன.

அவைகளுக்குக் காவல்துறையின் அனுமதி உண்டா? கொடுக்கப்பட்டதா?

கொடுக்கப்படவில்லை என்றால், அவர்கள்மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா?


சாதாரண ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்றவற்றிற்கு மற்றவர்களைக் கைது செய்யும் காவல்துறை, கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் உள்பட பலரையும் கட்டுக்குள் கொண்டுவர தடுப்பு நடவடிக்கை எடுக்கும் தமிழக காவல்துறை, பார்ப்பனர்களுக்கு மட்டும் தனிச்சலுகை காட்டலாமா? இப்போது நடைபெறுவது ஜனநாயக ஆட்சியா? அல்லது "மனுதர்ம ஆட்சி"யா?
மற்றவர்களும் எதிராகக் கிளம்பினால் இதே நிலைப்பாட்டை காவல்துறை எடுக்குமா?
காவல்துறை இப்படி ஒரு சார்பு நிலை எடுக்கலாமா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner