எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் திராவிடர் திருவிழா

திரைப்பட நடிகர் விஷய் சேதுபதி, இயக்குநர் கோபிநயினார், கவிஞர் செவ்வியன்,

பறை இசைக் கலைஞர் வேலு ஆசான், ஓவியர் ஹாசிப்கான் ஆகியோருக்குப் பெரியார் விருதுகள்

தமிழின சாதனையாளர்களை பெரியார் திடல், தோளில் தூக்கிப் பாராட்டும்

தமிழர் தலைவர் நெகிழ்ச்சி உரை

சென்னை, ஜன.16 தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் தமிழினக் கலைஞர்களுக்கு பெரியார் விருது வழங்கிப் பாராட்டிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தமிழர்களின் சாதனையாளர் களைத் தோளில் தூக்கி பாராட்டுவோம் என்று கூறினார்.

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு விழா, பொங்கல் விழா திராவிடர் திருநாளாக இரண்டு நாள் விழா (15.1.2018, 16.1.2018), தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 24 ஆம் ஆண்டு விழா சென்னை வேப்பேரி பெரியார் திடல் எம்.ஆர்.ராதாமன்றத்தில் நேற்று (15.1.2018) மாலை  சிறப்பான ஏற்பாடுகளுடன் தொடங்கி நடை பெற்றது. விழாவில் பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பில் சர்க்கரைப் பொங்கல், வடை அனைவருக்கும் வழங்கப்பட்டது.

கவிஞர் செவ்வியன், மக்கள் செல்வன் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி, திரைப்பட இயக்குநர் கோபி நயினார், பறை இசைக்கலைஞர் வேலு ஆசான், ஓவியர் ஹாசிப்கான் ஆகியோரின் பல்துறை சாதனை களைப் பாராட்டி, தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் Ôபெரியார் விருதுÕ வழங்கிப் பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப் புரையாற்றினார்.

கலைநிகழ்ச்சி

கலைநிகழ்ச்சிகளை பல்கலைச் செல்வர் மு.கலைவாணன் தொடங்கி வைத்தார். பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள அன்னை மணியம்மையார் சிலை அருகிலிருந்து பறையொலி முழங்க மயிலாட்டங் களுடன் ஊர்வலமாக பெரியார் திடலுக்கு குதூகுலத்துடன் ஏராளமான வர்கள் திராவிடர் திருநாள் விழாவில் எழுச்சியுடன்  பங்கேற்றனர். வழி நெடுகிலும் கழகக் கொடிகளுடன் கரும்புகளும்  இணைத்து கட்டப்பட்டி ருந்தன. உணவு அரங்கங்கள், சிறு வர்களைக் கவரும் விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட பல்வேறு ஏற் பாடுகளுடன் பெரியார் திடல் திரா விடர் திருநாளில் திருவிழாக்கோலம் பூண்டது.

தமிழ் இசை வரலாறு ஒளிப்படக் கண்காட்சி

தமிழ் இசை வரலாறு ஒளிப்படக் கண்காட்சியை எழுத்தாளர் மஞ்சை வசந்தன் திறந்து வைத்தார். விழாவுக்கு வருகைதந்த பலரும் தமிழ் இசை வரலாறு ஒளிப்படக் கண்காட்சியை யும், பல்வேறு வகைகளில் காட்சிப் படுத்தப்பட்ட இசைக்கருவிகளையும் கண்டு பயன்பெற்றனர்.

பண்ணிசை

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் நல்லசிவம் குழுவினரின் பண்ணிசை நிகழ்ச்சியில் தமிழ் இசை, இசை மரபு, இசை மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுடன் அக்குழுவினரின் தமிழிசை பார்வை யாளர்களிடையே பெரிதும் வரவேற் பைப் பெற்றது. வேலு ஆசான் கலைக் குழுவினரின் நாட்டுப்புற கலைகள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. குழந்தைகள் பெரிதும் ஊக்கத்துடன் பறையிசைக்கேற்ப ஆடினார்கள்.

திராவிடர் திருநாளில் படத்திறப்பு மற்றும் பெரியார் விருது வழங்கும் விழாவில் த.க.நடராசன் வரவேற்றார்.  வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி அறிமுக உரையாற்றினார். கா.அமுத ரசன் இணைப்புரை வாங்கினார். வே.ஞானசேகரன், தி.இரா.இரத்தி னசாமி, வி.பன்னீர்செல்வம், இரா.வில்வநாதன், பா.தென்னரசு, ப.முத் தையன், த.ஆனந்தன், கோ.ஒளி வண்ணன், இரா.தமிழ்செல்வன், கி.சத்தியநாராயணன் உள்ளிட்டவர்கள் முன்னிலையில் வரியியல் வல்லுநர் ச.இராசரத்தினம் தலைமையுரையாற் றினார்.

படத்திறப்பு

கவிக்கோ அப்துல் ரகுமான், பேராசிரியர் பு.இராசதுரை ஆகியோரின் படங்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திறந்து வைத்தார்.

Ôபெரியார் விருதுÕ

கவிஞர் செவ்வியன், மக்கள் செல்வன் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி, Ôஅறம்Õ இயக்குநர் கோபி நயினார், பறை இசைக்கலைஞர் வேலு ஆசான், ஓவியர் ஹாசிப்கான் ஆகியோருக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்துச் சிறப்பித்து, தந்தை பெரியார் முழு உருவ சிலை, இயக்க புத்தகங்களுடன்  Ôபெரியார் விருதுÕ வழங்கினார்.

"சு.தெ.மூர்த்தியும் சிங்கப்பூர் திரா விடர் கழகமும்" நூலாசிரியர் கவிஞர் செவ்வியன், மேடையில் பேசுவதை விட பறையில்தான் பேசுவேன் என்று கூறும் அலங்காநல்லூர் சமர் கலைக் குழுவின் வேலு ஆசான், 'விகடன்' இதழில் மாணவி அனிதாவின் இறப் பில் அனைவரின் உள்ளத்தையும் பிரதிபலித்த, Ôசமூக அநீதிÕயால்   உயிரிழந்த மாணவி அனிதாவின் உடலை காமராசர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் தூக்கி சமூக நீதியைக் காப்போம் என்று குறிப்பிடும் கருத்துப்படத்தின் ஓவியர்  ஹாசிப்கான், மக்களுக்கான களமாக திரைப்படம் அமைய வேண் டும் எனும் தாகத்துடன் பணியாற்றிவ ருபவரான அறம் திரைப்பட இயக் குநர் கோபி நயினார், ஜாதி, மத வேறுபாடுகளின்றி தமிழர்களாக ஒன்றுபடுவோம் -- வென்றிடுவோம் எனும் முழக்கமிடும் திரைப்பட நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோர் Ôபெரியார் விருதுÕ பெற்று உரையாற்றினார்கள்.

ஈரோடு தமிழன்பன்

பெரியார் விருது பெற்றவர்களின் உரையைத் தொடர்ந்து,    பகுத்தறிவு கவிஞர் ஈரோடு தமிழன்பன் பாராட் டுரையாற்றினார்.  கோட்பாடுகளை அளித்தவர் தந்தை பெரியார். தந்தை பெரியார் பேச்சும் எழுத்தும் சிறந்த இலக்கியங்கள். தந்தை பெரியாரே விருது அளித்து பாராட்டுவதைப்போல் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பெரியார் விருது அளித்து வருகிறார். Ôபெரியார் விருதுÕ பெற்ற நான் இன்று பெரியார் விருது பெறுபவர்களை பாராட்டுகிறேன் என்று குறிப்பிட்டார்.

தமிழர் தலைவர் பாராட்டு

கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர் களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து இயக்க புத்தகங்களை வழங்கி சிறப்பு செய்தார். இசைக்கருவிகளை காட்சிப் படுத்தி செயல் விளக்கங்களை அளித்த கோசை நகரான் சிவக்குமார், தமிழ் பண்ணிசை நிகழ்ச்சி நடத்திய பேராசிரியர் நல்லசிவம் ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து இயக்க புத்த கங்களை வழங்கி சிறப்பு செய்தார். நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகளில் பங் கேற்ற வேலு ஆசான் குழுவினருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சான்றிதழ்களுடன் இயக்க புத்தகங் களை அளித்து சிறப்பு செய்தார்.

பல்துறைகளில் சாதனையாளர் களாக திகழும் ஆற்றலாளர்களை, சாதனையாளர்களை, திராவிடர்களை  பெரியார் திடல் தோளில் தூக்கி பாராட்டும் என்றும் Ôபெரியார் விருதுÕ அளிக்கப்படுவதன் நோக்கம், விரு துக்கு பல்துறைகளின் சார்பில் தேர்வு செய்யப்பட்டவர்களின் சாதனைகள் குறித்தும் விரிவாக எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

விழா முடிவில் வை. கலையரசன் நன்றி கூறினார்.

கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், மோகனா அம்மையார், பெரியார் வீர விளையாட்டுக்கழக பேராசிரியர் ப.சுப்பிரமணியன், மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் உள்பட விழாவில் குடும்பம் குடும்பமாக குழந்தை களுடன் பெரிதும் ஆர்வத்துடன் ஏரா ளமானவர்கள் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner