எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லக்னோ, ஜன.16 தேர்தலை வாக்குச் சீட்டு முறையைக் கொண்டு நடத்த பாஜக அஞ்சு வது ஏன்? என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.

லக்னோவில் திங்கள்கிழமை தனது 62-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் கூறிய தாவது:

உத்தரப் பிரதேசம், உத்தர கண்டில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறை கேடு செய்துதான் பாஜக வெற்றி பெற்றுள்ளது. குஜராத்தில் கூட அக்கட்சி நூலிழை வித்தியாசத் தில்தான் வெற்றி பெற்றுள்ளது. அங்கு கிராமப்புற மக்களும், தலித் மக்களும் பாஜகவை முற் றிலுமாகப் புறக்கணித்துவிட்ட னர். மோடியை நாட்டு மக்கள் தூக்கி வீசும் நாள் வெகு தூரத்தில் இல்லை. அவர் பாஜக ஆட்சியையோ, தேசிய ஜனநா யகக் கூட்டணியின் ஆட்சி யையோ நடத்தவில்லை. ஆர் எஸ்எஸ் ஆட்சியைத்தான் நடத்தி வருகிறார். நாட்டின் ஜன நாயகக் கட்டமைப்பை சிதைத்து, தங்கள் கட்சியை முழுமையாக நிலை நிறுத்திக் கொள்ள மோடி முயற்சிக்கிறார்.

அதற்கு வசதியாக பாஜக வினர் இந்த ஆண்டு இறுதி யிலேயே மக்களவையைக் கலைத்துவிட்டு தேர்தலை நடத் தினாலும் ஆச்சரியப்படுவதற் கில்லை. தங்கள் கொள்கை களுக்கு ஏற்ப அரசமைப்புச் சட் டத்தையும், பிற சட்டங்களை யும் திருத்த பாஜக தொடர்ந்து முயற்சித்து வருகிறது. தங்களை நேர்மையானவர்களாகக் காட் டிக் கொள்ள அக்கட்சியினர் முயற்சிக்கின்றனர். ஆனால், தேர்தலை வாக்குச் சீட்டு முறை யில் நடத்த அவர்கள் அஞ்சுவது ஏன்? என்று தெரியவில்லை.

அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடித்துவிட வேண் டும் என்ற வெறியுடன் பாஜக செயல்பட்டு வருகிறது. இதற் காக மதவாதம் உள்பட மக் களைப் பிளவுபடுத்தும் அனைத்து வழிகளையும் அக்கட்சி கையாண்டு வருகிறது. எங் களைப் பொறுத்தவரையில் பாஜகவும், காங்கிரஸும் ஒரே மாதிரியாக புறக்கணிக்கப்பட வேண்டியவைதான். அவை இரண்டுமே தலித் மக்களுக்கும் எதிரான கொள்கைகளை உடை யவைதான் என்றார் மாயாவதி.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner