எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ரேபரேலி, ஜன. 17 -பாஜக-வானது, நாட்டில் ஜாதிய மோதல்களை தூண்டுவதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலை வராக பதவி ஏற்ற பின்னர், ராகுல்காந்தி முதன்முறையாக உத்தரப்பிரதேச மாநிலம் ரேப ரேலி மற்றும் அமேதிக்கு பய ணம் மேற்கொண்டு உள்ளார். இந்தப் பயணத்தின்போது பல் வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற் றுப் பேசிய ராகுல் காந்தி, மத்தியிலுள்ள பாஜக அரசா னது, நாட்டில் குழப்பம் மற்றும் ஜாதிய மோதல்களை தூண்டியதை தவிர்த்து வேறு எதுவும் செய்யவில்லை என பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார்.

குஜராத் மாடல் வளர்ச்சி பற்றி பிரதமர் மோடி பேசு கிறார்; இருப்பினும் குஜராத் மாநிலமக்கள் கூட என்ன மாடல் வளர்ச்சி? என்றுகேள்வி எழுப்பும் நிலையில் தான் நிலைமை இருக்கிறது; மேலும், மோடி அரசானது விவசாயி களின் நிலத்தையும், தண்ணீ ரையும் பறித்து விட்டதாக குஜராத் மக்கள் குற்றம் சாட் டுகின்றனர் என்றும் ராகுல் தெரிவித்தார்.

ஒரு பிரிவை சேர்ந்த மக்களை, மற்றொரு பிரிவை சேர்ந்தமக்களுடன் சண்டைப் போட தூண்டிவிடுவதன் மூலம் ஆதாயம் அடையலாம் என்ற ஒற்றை நம்பிக்கையில்தான் மோடி அரசு இருக் கிறது என்றும்குறிப்பிட்ட ராகுல், மக்களுக்குள் மோத லைத் தூண்டிவிடுவதுதான் மோடியின் உண்மையான பணியாக இருக்கிறது என்றும் சாடினார். சீனாவுடன் இந்தியா போட்டியிடுவது தொடர் பாகவும் விமர்சித்த ராகுல், சீனாவுடன் நாம் போட்டியிடு கிறோம்; சீனா 24 மணி நேரத் திற்கு 50ஆயிரம் வேலை வாய்ப்பை உருவாக்குகிறது; ஆனால் இந்தியா 24 மணி நேரத்திற்கு 450 பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பை உருவாக்குகிறது என்று புள்ளி விவரங்களையும் வெளியிட் டார். பிரதமர் மோடியும், ஆதித்யநாத்தும் அதிகமாக பேசுகிறார்கள்; 2 கோடி மக் களுக்கு வேலைவாய்ப்பை கொடுப்பதை பற்றி பேசு கிறார்கள்; ஆனால் பிரதமர் மோடியால் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்க முடிந்ததா? என்றும் கேள்வி எழுப்பினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner