எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கார்ட்டோசாட்-2 எடுத்த

முதல் படத்தை இஸ்ரோ வெளியிட்டது

புதுடில்லி, ஜன.18- இந்தியாவின் 100- ஆவது செயற்கைக்கோளான கார்ட்டோசாட்-2எடுத்தமுதல் படத்தை இஸ்ரோ வெளியிட் டுள்ளது. கார்ட்டோசாட்-2 செயற் கைக்கோள், கடந்த ஜனவரி 12-ஆம் தேதி பி.எஸ்.எல்.வி.சி-40 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டு, பூமியிலிருந்து சுமார் 510 கி.மீ. உயரத்தில் புவியின்சுற்றுவட்டப்பாதை யில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.இஸ்ரோ வர லாற்றில் இது புதிய சாதனை யாகவும், புதிய மைல் கல் லாகவும் பார்க்கப்படுகிறது.இயற்கை வள ஆய்வு, கடல் வழி போக்குவரத்து கண்காணிப்பு, நீர்வளமேம்பாடு, நகர்ப்புற உள்கட்டமைப்புபணிகளுக்கு உதவும் வகையில் கார்ட்டோசாட்-2 வடிவமைக்கப்பட்டிருந்த நிலை யில், அது தனது பணியைத் துவங்கியுள்ளது. கார்ட்டோசாட்-2 எடுத்த முதல் படத்தை இஸ்ரோ தனதுஇணையதளத்தில்வெளி யிட்டுள்ளது. மத்தியப்பிரதேசத் தின் இந்தூர் நகரில் உள்ள ஹொல்கார் கிரிக்கெட் மைதா னத்தை உள்ளடக்கிய இந்தப் படத்தை, கார்ட்டோசாட்-2 செயற்கைக்கோளானது, கடந்த 15-ஆம் தேதி எடுத்துள்ளது. 

இந்நாள்...இந்நாள்...

 

1924 - பாவலர் பாலசுந்தரம் பிறப்பு

1963 - ப.ஜீவானந்தம் மறைவு

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner