எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நான் செல்லும் இடமெல்லாம் சுத்தம் செய்வீர்களா? பிரகாஷ்ராஜ்

 

பெங்களூரு, ஜன.18 கருநாடக மாநிலம், சிர்சி நகரில் உள்ள ராகவேந்திரா மடத்தில், நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்று பேசிய மேடை, நிகழ்ச்சி முடிந்த பின், பசுவின் கோமியத்தால் கழுவி சுத்தம் செய்யப்பட்டதாம்.

தமிழ், கன்னட திரைப்படங் களில் நடித்து வரும், நடிகர் பிரகாஷ் ராஜ், பா.ஜ.,விற்கு எதிராக கருத்துகளை கூறி வரு கிறார். காங்கிரசைச் சேர்ந்த, சித்தராமையா முதல்வராக உள்ள கருநாடகாவில், சிர்சி நகரில் உள்ள ராகவேந்திர மடத்தில், சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், நடிகர் பிரகாஷ்ராஜ்பங்கேற்றார்.அப்போது, உத்தர கன்னடா பகுதியைச்சேர்ந்தவரும்,மத் தியஅமைச்சருமான, அனந்த் குமார் ஹெக்டேவை கடுமை யாக விமர்சித்து, பிரகாஷ்ராஜ் பேசினார். இது, பா.ஜ.க., இளை ஞர் அணியினர் மத்தியில், சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, நடிகர் பிர காஷ் ராஜ் பங்கேற்ற விழா மேடை மற்றும் அதைச் சுற்றி யுள்ள பகுதிகளை, பசுவின் கோமியத்தால் கழுவி சுத்தம் செய்ய, பா.ஜ.க., இளைஞர் அமைப்பினர் முடிவு செய்தனர். இதையடுத்து, சிர்சி நகர, பா.ஜ., இளைஞர் அணி தலைவர், விஷால் மராதே தலைமையில், மேடை உள்ளிட்ட பகுதிகள், பசுவின் கோமியத்தால் கழுவி சுத்தம் செய்யப்பட்டன.

இதன்பின், விஷால் மராதே பேசியதாவது:

தங்களை அறிவாளிகள் எனக் கருதும் சிலர், எங்கள் வழிபாட்டுத் தலங்களை அசுத் தம் செய்கின்றனர். இவர்களின் வருகையால், ஒட்டுமொத்த சிர்சி நகரமே அசுத்தமாகி விட்டது. இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் இவர்கள், மாட்டிறைச்சி சாப்பிடுவதை அங்கீகரிக்கின்றனர்; இத்தகைய, சமூக விரோதிகளை சமுதாயம் மன்னிக்காது.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரகாஷ் ராஜ் பதில்

இதுகுறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பதிவில், சிர்சி நகரில் நான் பேசிய மேடையை பாஜகவினர் கோமியத்தை தெளித்து சுத்தம் செய்துள்ளனர். இதேபோல நான் செல்லும் இடமெல்லாம் பாஜகவினர் சுத்தம் செய்வீர் களா? என்று கேள்வி எழுப் பியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner