எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வீரத்துறவி என்றும், இன்றைய இளைஞர்களுக்கான வழிகாட்டி என்றும், இன்னும் ஒருபடி மேலே சென்று மதப் புரட்சியாளர் விவே கானந்தர் என்றும் இந்து மத அபிமான சடகோபத்திற்கு ஆளான ஊடகங்களும், உபதேசிகளும் ஊது குழல் எடுத்துக் கூவிக் கொண் டிருக்கின்றனர்.

கல்விக் கூடங்களுக்கெல் லாம் வீரத்துறவி விவேகானந்தரின் இரத ஊர்வலமாம். கண்டிப்பாக விவே கானந்தர் இந்து மதக்காரர்.

அவர் தலையில் சூட்டுகிற கிரீடமே அமெரிக்கா வரை சென்று இந்து மதக் கித்தாப்பை எடுத்துப் பரப்புரை செய்து வந்தவர் என்பது தான். அப்படியிருக்கும்போது ஓர் இந்து மதவாதியை மதச் சார்பற்ற அரசுக்குச் சொந்தமான கல்வி நிறு வனங்களுக்குள் ஊடுருவச் செய் வதில் உள்நோக்கம் இருக்கிறது என்பது உறுதியான உண்மையே.

இந்துத்துவாவை கல்விக் கூடங்களில் கொண்டு செல்லுவ தற்கு இதனை ஓர் உபாயமாகக் கொண்டு திட்டமிட்டுள்ளனர்.

இந்த நேரத்தில் விவேகானந் தரின் உண்மை உருவத்தை வெளிப்படுத்த வேண்டியது உண்மை விரும்பிகளின் உன்னத மான கடமையாகும்.

அது 1892ஆம் ஆண்டு; திருவனந்தபுரத்திற்குச் சென்றார் விவேகானந்தர்; ஒன்பது நாள்கள் அங்குத் தங்கியுமிருந்தார்.

அந்த ஒன்பது நாள்களில் ஒரு நாள் விவேகானந்தர் மனோன் மணியம் ஆசிரியர் சுந்தரனாரின் விருந்தினராக சென்றிருந்தார்.

விருந்திற்குப் பிறகு இருவரும் உரையாடிக் கொண்டிருந்தபோது  - சற்றும்  எதிர்பாரா வகையில் விவேகானந்தர் சுந்தரனாரைப் பார்த்துக் கேட்டாரே ஒரு கேள்வி.

"உங்கள் கோத்திரம் என்ன?" மனோன்மணியம் சுந்தரனார் இந்தக் கேள்வியை விவேகானந்தரி டமிருந்து சற்றும் எதிர்பார்க்க வில்லைதான்.

வீட்டுக்கு விருந்தினராக வந்தவரிடம் தன் வெஞ்சினத்தைக் காட்ட முடியாதே! ஆத்திரம் அறி வுக்குச் சத்துரு என்கிற முறையில், அந்நிலையிலும் அமைதியாக, அறிவார்ந்த பதிலையளித்தார்.

அந்தப் பதில் என்ன? தன் குறிப்புப் புத்தகத்தில் சுந்தரனாரே பொறித்து வைத்துள்ளார்.

"உவப்போடு என்னுடன் பேசி மகிழும் உத்தம நண்பர் விவே கானந்தர் தங்கள் கோத்திரம் என்ன என்று வினா எழுப்பினார். "வேறு ஒரு தினமாகில் வினாவினைக் கேட்ட நான் வெகுண்டிருப்பேன். உறவென விருந்துக்கு வந்த அந்த உயர்ந்த நண்பரிடம் நான் மெல்லிய குரலில், எனக்கும், கோத்திரத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தன்மானம் காக்கும் தென்னாட்டில் பிறந்த திராவிட இனத்தைச் சேர்ந் தவன் நான் என ஆத்திரமின்றிக் கோத்திரக் கேள்விக்கு விடை யளித்தேன்" என்று எழுதி வைத் துள்ளார்.

திராவிட சுந்தரனார் எங்கே - இந்துமத விவேகானந்தர் எங்கே? சிந்திப்பீர்!

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner