எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜன.19 இந்தியாவின் பாது காப்புக்காக ராணுவத்தில் அக்னி சீரிஸ் என்ற பெயரில் பல்வேறு ரக ஏவுகணைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த ஏவுகணைகளை இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத் தினர் அடிக்கடி விண்ணில் செலுத்தி பரிசோதித்து பார்ப்பது உண்டு.

அந்த வரிசையில் நேற்று (வியாழக் கிழமை) காலை அக்னி-5 ரக ஏவுகணை சோதனை நடந்தது. திட்டமிட்டப்படி குறிப் பிட்ட இலக்கை அந்த ஏவுகணை தாக்கி யது. இதனால் ஏவுகணை சோதனை வெற் றிகரமாக நடந்ததாக அறிவிக்கப்பட்டது.

கடைசியாக அக்னி-5 ரக ஏவுகணை சோதனை 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத் தப்பட்டு இருந்தது. 13 மாதங் களுக்கு பிறகு மீண்டும் அந்த ரக ஏவு கணை பரிசோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஆற்றல் கொண்ட அக்னி-5 ஏவுகணையால் 5 ஆயிரம் கி.மீ. தொலைவில் உள்ள இலக்கையும் துல்லியமாக தாக்க முடியும். ஆனால் சீனா இதுபற்றி கூறுகையில், அக்னி-5 ரக ஏவு கணைக்கு 8 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் செல்லும் ஆற்றல் உள்ளது என்றது.

ஒடிசா கடற்கரையில் இருந்த ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்ட அக்னி-5 ரக ஏவுகணை அணு ஆயு தங்களை தேவைக்கு ஏற்ப சுமந்து செல்லும் திறன் கொண்டது. இந்த ஏவுகணையில் 3 கட்ட எரிபொருள் நிரப்பப்பட்டிருக்கும்.

இதனால் இந்த ஏவுகணையால் சீனாவின் வடக்கு பக்க எல்லை வரை செல்ல முடியும் என்பது குறிப் பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner