ஆன்மிகம் பற்றி வித் தாரமாகப் பேசப்படும் கால கட்டம் இது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவரும், உஸ்மானியா பல்கலைக் கழகத்தின் அரசியல் துறைத் தலைவருமான பேராசிரியர் காஞ்சா அய்லய்யா அவர்கள் "இந்து ஆன்மிகமே பாசிசம் தான்" எனும் தலைப்பில் அளித்த நேர்காணல் ஒரு சிறு நூலாக வெளி வந்துள்ளது என்றால் பலருக்கும் ஆச்சரி யமாக இருக்கலாம்.
இதன் பொருள் ஆன்மிகம் என்பது மதத்தைச் சார்ந்ததே என்று அறுதியிட்டு உறுதி செய்கிறார்.
"புருஷசுத்தம் என்பது சமமற்ற தன்மை எனும் போது, அது எப்படியெல்லாம் இந்து மதத்தோடு பொருந்திப் போகிறது என்பது மிகவும் முக்கியம். ஆகவே, இந்து மதத்தின் இந்தத் தன்மையை எப்படி விளக்குவது என்று நான் யோசித்தேன். அப்போது ஒரு விஷயம் புரிந்தது. நாஜியிசமோ ,பாசிசமோ அர சியலோடு தொடர்புடையது என்பது புரிந்தது. அங்கே ஆன்மிகமோ, மதமோ வரவேயில்லை. ஏனெனில் அங்குக் கிறித்தவப் பின்னணி இருந்தது. அதுபற்றி ஆழ்ந்து யோசிக்கையில் இங்கிருப்பது ஆன்மிகப் பாசிசம் என்பது புலப்பட்டது. பாசிசத்தின்மீது ஆன்மிகத்தைத் தட்டியெ ழுப்பினால் அதற்கு வலிமை அதிகமாகி நீண்ட காலம் நீடிக்கும். இந்த ஆன்மிகப் பாசிசத் தன்மையினால் தான் இந்து மதம் இத்தனை காலம் தாக்குப் பிடித்து வந்திருக்கிறது. பெரிய அளவு இழப்புகளோடு குறுகிய காலத்தில் அய்ரோப்பா வில் அரசியல் ரீதியான பாசிசத்தை ஒழித்துவிட முடியும். ஆனால் ஆன்மிகத் தில் பாசிசத்தை அழித்துவிட முடியாது. அதன் முக்கியமான பரிமாணங்களை மக்கள் புரிந்து கொள்வதும் கடினம் தான். ஒரு மதத்தை அல்லது அரசை புரிந்து கொள்ள ஒரு கால கட்டம் தேவை. நமது கால கட்டத்தில்தான் இந்த ஆன்மிகப் பாசிசம் என்ற சொல் பிடிபட்டிருக்கிறது" என்று பேராசிரியர் காஞ்சா அய்லய்யா குறிப்பிடுவது மிக மிக முக்கியமானது.
நாஜியிசமோ, பாசிசமோ அரசியலோடு தொடர்புடை யது. ஆங்கே ஆன்மிகமோ, மதமோ வரவேயில்லை. ஆனால் இங்கு சொல்லப்படும் ஆன்மிகமோ இந்து மதத் தோடு தொடர்பு உடையது - இது மிகவும் ஆபத்தானது என காஞ்சா அய்லய்யா கூறு வதைக் கவனியுங்கள், கவனியுங்கள்!
இந்துத்துவாவாதிகள் ரஜினியைக் கட்டித் தழுவு வதன் உள்நோக்கம் புரிகிறதா?
- மயிலாடன்