எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் என்று கூறப்படுகிற திரு. எச். ராஜா அவர்கள் உண்மையைப் பேசுவதேயில்லை என்பதில் உறுதியானவராக இருக்கிறார் என்று தெரிகிறது.

திருச்சியில் திராவிடர் கழகத்தின் சார்பில் இம்மாதம் முதல் வாரத்தில் நடத்தப்பட்ட உலக நாத்திகர் மாநாட்டில் நான் பங்கேற்று அம்மாநாட்டைத் தொடங்கி வைத்ததாக ஓர் அண்டப் புளுகை அவிழ்த்துக் கொட்டியுள்ளார்.

இது கலப்படமற்ற ஜமக்காளத்தில் வடிகட்டப்பட்ட பெரும் பொய்யுரையாகும்.

ஒரு தேசியக் கட்சியின் அகில இந்திய செயலாளர் என்ற பதவியில் இருப்பவர் எதையும் தீர விசாரித்துக் கருத்துக் கூற வேண்டியவர் அல்லவா?

அந்தக் கட்சி, அதன் பொறுப்பாளர்கள், எந்தத் தகுதியில் இருக்கிறார்கள் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக் காட்டுதான்.

அதே நேரத்தில் தந்தை பெரியார் அவர்களின் கருத்துக்கள் கடவுள், மதம் சார்ந்து எப்படியிருப்பினும், அவர்களின் சமூக நீதிக் கருத்துக்களுக்கு நன்றியுணர்வுடன் தலை வணங்குவதில் நாங்கள் என்றும் முன்னணியில் இருப்போம் என்பதைத்தெரிவித்துக் கொள்கிறோம் என்று பேராயர் எஸ்றா சற்குணம் அவர்கள் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner