எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சிதம்பரம், ஜன.21  தமிழகத்தில் 110 சதவிகித பேருந்து கட்டண, உயர்வால் இரண்டு கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய மாட்டோம் என்று சொன்னால், மக்கள் ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதைத் தவிர வேறு வழியில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் செய்தி யாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தில் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவை நடத்திவைப்பதற்காக  இன்று (21.1.2018)  காலை சிதம்பரம் நகருக்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:

அண்மையில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்ட ணங்கள் - சரியான நிர்வாக அமைப்பை, பேருந்தை முறையாக நடத்தியிருந்தால் இந்த கட்டண உயர்வே தேவைப்பட்டிருக்காது. 110 சதவிகிதம் கட்டண உயர் வால் பேருந்தில் பயணம் செய்யக்கூடிய இரண்டு கோடி பேர் பாதிக்கக்கூடிய அளவிற்கு வெகுவாக இருக்கிறது.

நிர்வாக கோளாறு

அதோடு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது என்று சொல்லுவதைவிட, சரியான பராமரிப்புகளே பேருந்துகளில் இல்லை. அதோடு அரசாங்கத் தினுடைய நிதி நிலையைப் பொறுத்தவரையில், ஏகப்பட்ட அளவில் அதிக கடன் வாங்கி அதிகப் பற்று வைத்துக்கொண்டிருக்கிற காரணத்தால், எதற்கு எந்த தலைப்பிலே ஒதுக்கப்படுகின்ற நிதி அந்த தலைப்புக்கு போய்ச் சேராத நிர்வாக கோளாறு, ஆட்சியின் குறைபாட்டின் காரணமாகத்தான் இப்படி ஒரு நெருக்கடியே அந்த போக்குவரத்துத் துறைக்கு ஏற்பட்டிருக்கிறது.

உதாரணமாக, தொழிலாளர்களிடம் பிடிக்கப் பட்ட அவர்களின் பணத்தை நேரடியாக அந்த பி.எஃப் கணக்கிலே கட்டாமல், அதை வேறு செலவினத்துக்கு திருப்பி விடக்கூடிய அந்த நிலை. இதுமாதிரி பல துறைகளிலே இருக்கிறது. அதில் திருப்பிவிடுவதனுடைய விளைவு தான், எங்களுக்கு கட்ட வேண்டிய பணத்தை கொடுக்கவில்லையே என்ற கேட்டபோது, அப்போது வேலை நிறுத்தம் ஏற்பட்டது. வேலை நிறுத்தத்தினால் நட்டம் ஏற் பட்டது. சில இடங்களில் 110 சதவிகிதம் உயர்த்தி யிருக்கிறார்கள். பொதுமக்களுடைய அதிருப்திக் கும், எதிர்ப்புக்கும் ஆளாயிருக்கிறது. எல்லாத் தரப்பிலிருந்தும் எதிர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. மற்ற மாநிலங்களில் இருப்பதை விட குறைவாக இருக் கிறது என்று சொல்லுவது நியாயமாகாது. எனவே, நிர்வாக சீர்கேட்டை சீர்படுத்தினால் சரியாகிவிடும்.

கலைஞர் ஆட்சியில்....

உதாரணமாக கலைஞர் அவர்களுடைய ஆட்சிக்காலத்திலே, டீசல் விலை உயர்த்தப்பட்ட காலத்திலேகூட, அவர்கள் பேருந்து கட்டணத்தை உயர்த்தவில்லை. அவர்களால் சரியாக நிர்வாகம் செய்ய முடிந்தது. அப்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த திருச்சி நேரு போன்றவர்கள் மிக சாமர்த்தியமாக அதை நிர்வகித்து, பல இடங் களிலே லாபம் வரக்கூடிய அளவிற்கு இருக்கின்றன.

ஆம்னி பேருந்து போன்ற அந்த தனியார் துறைகளிலே லாபத்தை அவர்கள் ஈட்டுகின்ற பொழுது, ஏன் இவர்களால் சரியான நிர்வாகத்தை செய்ய முடியாது?

பல நேரங்களிலே வண்டிகளெல்லாம் பராமரிப் பில்லாமல் மோச மாக இருக்கின்றன. இது ஆட்சி யாளர்களின் குறைபாடே தவிர, நிர்வாக குறைபாடே தவிர, இதில் சரியான முறையிலே நிதி நிலையை அவர்கள் பராமரிக்காததனுடைய விளைவு பொதுமக்கள் தலையிலே இந்த சுமை ஏற்றப்பட்டிருக்கிறது. இது வன்மையான கண்டனத்துக்குரியது.

நாங்கள் மறு பரிசீலனை செய்ய மாட்டோம் என்று சொன்னால், மக்கள் அவர்களை வீட்டுக்கு  அனுப்புவதைத் தவிர வேறு வழி யில்லை.

மக்கள் விரோத செயல்

தேவையின்றி அண்மையில் தமிழக அரசு போக்குவரத்துத் துறையில் பேருந்துகளின் கட்ட ணத்தை 110 சதவிகித அளவில் உயர்த்தியது மக்கள் விரோத செய லாகும். ஏற்கெனவே அதனுடைய நிர்வாகம் சீரழிந்த காரணத்தால்தான் இப்படிப்பட்ட பெருத்த நட்டங் களும், நிதித்துறையிலே அதற்கென்று தொழிலாளர் களுக்கு ஒதுக்கப்பட்ட அந்த தொகையை நேரடியாக அதற்குரிய தனி இடத்திலே செலுத்தி, அதைப் பாதுகாக்காமல், அவ்வப்போது செலுத்தாததனுடைய விளைவாகத்தான் வேலை நிறுத்தம், தொழி லாளர்களுடைய எதிர்ப்பு இது அத்தனையும் வரவேண்டிய அவசியம் வந்தது. இது அத்தனையும் இவர்களே உருவாக்கிக் கொண்டதே தவிர, தானாக ஏற்பட்டது அல்ல. இந்த சூழ்நிலையில் அதை சரிகட்ட வேண்டும் என்று சொல்லி, மீண்டும் மீண்டும் இப்படி பொதுமக்கள் தலையிலே, ஏழை எளிய மக்கள், பயனாளிகள் இரண்டு கோடி பேருக்கு மேலே பேருந்திலே பயணம் செய்யக்கூடியவர்கள்.

சில இடங்களிலே ஆம்னி பஸ்கள் என்று சொல்லக்கூடிய அந்த ஆம்னி பஸ்களிலே பயணம் செய்பவர்களுக்குரிய கட்டணத்தைவிட அரசு பேருந்துகளிலே கட்டணம் அதிகம் என்பது இருக்கிறதே அது தவறான, வேதனையான ஒன்று.

எனவேதான், இதில் மறுபரிசீலனைக்கே இடமில்லை என்று சொன்னால், இவர்கள் ஆட்சிக்கு மீண்டும் வருவதற்கும், மறு வழி கிடையாது என்பதை மக்கள் காட்டுவார்கள். உணர்த்துவார்கள். எனவே, கண்டனத்துக்குரிய ஒன்று.

முழுக்க முழுக்க அதிகப்படியான அதிகப்பற்று என்ற கடனை வாங்கி நான்கு லட்சம் கோடிக்கு மேலே இருக்கக்கூடிய அளவுக்கு ஆக்கியிருக் கிறார்கள். மேலும் மேலும் சுமையா? என்று கேட்டுக் கொண்டிருந்தால், நிர்வாகமும், ஆட்சியும்தான் அதற்கு பொறுப்பு.

திடீரென்று பேருந்து கட்டண உயர்வு என்று சொல்லி, இப்படி பொதுமக்கள் தலையிலே, எளிய மக்கள் தலையிலே இதை வைத்திருப்பது என்பது தவறான அணுகுமுறை. இன்னுங்கேட்டால், சரியான நிர்வாகமும், வேறு வழியிலே அதைப்பயன்படுத்தி தவறுகளை, ஓட்டைகளை அடைத்தாலே, இந்த பேருந்து கட்டணத்தை அதிகரிக்கும் தேவை ஏற்பட்டிருக்காது. நிர்வாகத் திறமையின்மைதான் இதற்கு காரணம். ஆட்சிதான் இதற்கு பொறுப்பு.

செய்தியாளர்: தமிழக அரசு வளர்மதிக்கு பெரியார் விருது கொடுத்திருக்கிறதே, அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

தமிழர் தலைவர்: யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதனால் ஒன்றும் தவறே இல்லை. ஏன் என்று கேட்டால், பெண்ணுக்கு கொடுத்திருக் கிறார்கள்.  அந்த அம்மா மூடநம்பிக்கை உள்ளவர் என்ற காரணத்தால் அல்ல, அரசாங்கமே மூடநம் பிக்கை உள்ளவர்கள்தான்.  பால் குடம், தரையில் உருளுவது, எல்லா மந்திரிகளும் தரையில் உரு ளுபவர்கள், மொட்டை அடித்துக் கொண்ட வர்கள், இவர்களிடம் போய் இவருக்கு கொடுக்கக் கூடாது, அவருக்கு கொடுக்கக்கூடாது என்று சொல் வதற்கில்லை, பகுத்தறிவாளர்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கும் முறையை அவர்களே கையாளவில்லை.

எங்களைப் பொறுத்தவரையில் ஒரு பெண்ணுக் காவது வந்திருக்கிறதே என்பதுதான். அந்த திருப்தி தான்.

செய்தியாளர்:  ஜெயலலிதா 4ஆம் தேதியே இறந்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், 5ஆம் தேதிதான் இறந்தார் என்று கூறுகிறார்களே?

தமிழர் தலைவர்: மருத்துவமனையைப் பார்த்து கேட்கவேண்டிய கேள்வி இது. என்னைப்பார்த்து அல்ல. மருத்துவமனையிலே ஜெயலலிதா இருந்த போது, அங்கிருந்தவர்களை போய் சந்தித்துவிட்டு, காபி சாப்பிட்டு வராத ஒரேயொரு கட்சித் தலைவர் நான்தான். காரணம் என்னவென்றால், கண்டாரைக் கண்டாரைக் கண்டாரைப்பார்த்துத் திரும்ப மாட்டேன் என்று சொன்னேன் அன்றைக்கு. ஆகவே தான்,  அதில் அதே நிலை. அவர்களைத்தான் கேட்க வேண்டும்.

செய்தியாளர்: ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்வது பிஜேபியா? ஆன்மிகவாதிகளா?

தமிழர் தலைவர்: இரண்டும் ஒன்றுதான். ஒன்று மாயமான். இன்னொன்று பொய்மான். ஏற்கெனவே பாஜக இரண்டு குதிரைகளை நம்பியிருக்கிறது. ஒரு குதிரை வண்டிக்குதிரை, இன்னொன்று நொண்டிக் குதிரை என்று தெரிந்த உடனே மூன்றாவது குதிரையாக ஏதாவது சண்டி குதிரை கிடைக்குமா என்று பார்த்தார்கள். அதுதான் இது. மாயக்குதிரையை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் குறிப்பிட்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner