எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

நாசிக், ஜன.21 மராட்டிய மாநி லத்தையே உலுக்கிய ஆணவ கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறப்பட் டுள்ளது.

மராட்டிய மாநிலம் அகமத்நகர் மாவட்டம் சோனை கிராமத்தை சேர்ந் தவர் சச்சின் காரு (வயது 24). இவர் ஒரு ஜூனியர் கல்லூரியில் துப்புரவு பணியாளராக வேலை செய்துவந்தார். இவருக்கும், இதே கல்லூரியில் படித்து வந்த மாணவி ஒருவருக்கும் காதல் மலர்ந்தது. இதையறிந்த அந்த பெண் ணின் பெற்றோர், ஜாதியை காரணம் காட்டி இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் காதல் இணையர் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தனர். சம்பவத் தன்று தங்களது வீட்டின் கழிவுநீர் தொட்டியில் ஏற்பட்ட அடைப்பை அகற்ற வருமாறு சச்சின் காருவுக்கு அந்த பெண்ணின் தந்தை அழைப்பு விடுத்தார். இதனை நம்பிய அவர், தனது நண்பர்கள் சந்தீப் (25), ராகுல் (20) ஆகியோருடன் அங்கு சென்றார்.

கொடூர கொலை

கழிவு நீர்த்தொட்டி அருகில் அவர்கள் நின்றுகொண்டிருந்தபோது அந்த பெண்ணின் தந்தை, அண்ணன் உள்பட உறவினர்கள் அவர்களை சூழ்ந்துகொண்டு கடுமையாக தாக்கினர். கூர்மையான ஆயுதங்களால் 3 பேரையும் கொடூரமாக வெட்டி சாய்த்தனர். இதில் 3 பேரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர். அதன்பின்னரும் ஆத்திரம் அடங்காமல் சச்சின் காருவை  துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை கழிவுநீர் தொட்டிக்குள் வீசினர்.

மராட்டிய மாநிலத்தையே உலுக்கிய இந்த ஆணவ கொலை சம்பவம் 2013-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி நடைபெற்றது. அவர்களை கொலை செய்த ரகுநாத் (52), ரமேஷ் (42), பிரகாஷ் (38), கணேஷ் (23), சந்தீப் (37), அசோக் நாவ்கிரே (32), அசோக் ரோகிதாஸ் ஆகிய 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். நாசிக் கீழமை நீதிமன்றத்தில் அவர்கள் மீதான வழக்கு விசாரணை நடந்துவந்தது.

6 பேர் குற்றவாளிகள்

இந்த வழக்கில் 50-க்கும் மேற்பட் டோர் நீதிமன்றத்தில் சாட்சி அளித்தனர். இறுதி கட்ட விசாரணை நிறைவடைந்த நிலை யில், கடந்த 15-ஆம் தேதி நீதிபதி ஆர்.ஆர்.வைஷ்ணவ், போதிய ஆதா ரங்கள் இல்லாததால் அசோக் ரோகிதாஸ் மட்டும் விடுவிக்கப்படுவதாகவும், மற்ற 6 பேர் மீதான குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவர் கள் அனைவரும் குற்றவாளிகள் எனவும் தீர்ப்பு அளித்தார். தண்டனை விவரத்தை பின்னர் அறிவிப்பதாகவும் கூறினார்.

குற்றவாளிகளுக்கான தண்டனை மீதான விவாதம் நேற்று (ஜன.20) நடை பெற்றது. குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு மனுதாரர் தரப்பு வழக் குரைஞர்கள் கேட்டுக்கொண்டனர். அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், அப்பாவியான சச்சின் காருவின் கை, கால்களை 8 துண்டு களாக வெட்டி, கழிவுநீர் தொட்டிக்குள் வீசும் அளவுக்கு குற்றவாளிகளுக்கு ஆத்திரம் ஏற்பட்டி ருக்கிறது. இதுதவிர, அவரது நண்பர்கள் 2 பேரையும் அடித்து கொலை செய் திருக்கின்றனர். அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.

6 பேருக்கு தூக்கு

இருதரப்பு வாதத்தையும் கேட்ட றிந்த நீதிபதி ஆர்.ஆர்.வைஷ்ணவ், குற்றவாளிகள் 6 பேருக்கும் அதிக பட்சமாக தூக்கு தண்டனையும், தலா ரூ.20 ஆயிரம் அப ராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். இதில், பாதி தொகை கொலை செய்யப்பட்ட வர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

பரபரப்பான இந்த தீர்ப்பை தொடர்ந்து, குற்றவாளிகள் 6 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner