எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிறுமிகளை வன்கொடுமை செய்தால்

மரண தண்டனை விதிக்கச் சட்டம்

அரியானா முதல்வர் தகவல்

அரியானா,  ஜன.21 அரி யானாவில் 12 வயதுக்குள்பட்ட சிறுமிகளை பாலியல் வன் கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தை இயற்றவுள் ளதாக அந்த மாநில முதல்வர் மனோகர்லால் கட்டர் சனிக் கிழமை தெரிவித்தார்.

அரியானா மாநிலம், கர் னாலில் சர்க்கரை ஆலை கட் டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற் றது.  இதில், முதல்வர் மனோ கர் லால் கட்டர் பங்கேற்றுப் பேசியதாவது:

அரியானாவில் அண்மை யில் நிகழ்ந்த பாலியல்  வன் கொடுமை பலாத்காரச் சம்ப வங்கள் கவலையளிக்கின்றன. இதுபோன்ற சம்பவங்களில் காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர். வன் கொடுமை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக் கப்பட வேண்டும். 12 வயதுக் குள்பட்ட சிறுமிகளை வன் கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தை இயற்ற, மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ஊடகங்களுக்கு வேண்டுகோள்

கடந்த ஆண்டில் பதிவான வன்கொடுமை புகார்களில் 25 சதவீத புகார்கள் பொய்யா னவை. இதுபோன்ற புகார் களில், அவற்றின் உண்மைத் தன்மையை உறுதி செய்யாமல் மக்கள் மத்தியில் தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். 75 சதவீத வன் கொடுமை சம்பவங்களில், பாதிக்கப்பட்டோரின் உறவி னர்கள், பக்கத்து வீட்டினர், ஏற்கெனவே பழக்கமானவர் களே ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

எனவே, இந்த விவகாரத் தில் காவல்துறையினரின் நட வடிக்கை மட்டுமன்றி சமூகத் துக்கும் பொறுப்பு உள்ளது என்றார் மனோகர் லால் கட் டர். அரியானாவில் அண்மை யில் நிகழ்ந்த இரு வேறு சம் பவங்களில், தலித் சமூகத்தைச் சேர்ந்த இரு சிறுமிகள், பாலி யல் வன்கொடுமை செய்யப் பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது நினைவு கூரத்தக்கது.

  

இந்நாள்... இந்நாள்...

1924 - புரட்சியாளர் லெனின் மறைவு

1997 - தஞ்சையில் பெரியார் நகர்வு புத்தகச் சந்தை துவக்கம்.

கறம்பக்குடியில் கிராமப்  பிரச்சாரம் துவக்கம்.

· போலியோ ஒழிப்பு நாள்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner