எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி,  ஜன.21 நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை  வழக்கில் குற்றம் சாட் டப்பட்ட ஆ.இராசா, கனிமொழி உள் ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து டில்லி சி.பி.அய். சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி உத்தர விட்டார்.

இந்த தீர்ப்பை தி.மு.க.வினர் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித் தும் கொண்டாடி வருகின்றனர். இதற் கிடையே, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா 2ஜி விவகாரம் தொடர்பான விவரங்கள் அடங்கிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்நிலையில், 2ஜி விவகாரத்தில் ஆ.இராசா எழுதிய 2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ் என்ற புத்தகத் தின் வெளியீட்டு விழா டில்லியில் நேற்று (20.1.2018) நடைபெற்றது. இதில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் புத்தகத்தின் முதல் பிரதியை ஃபரூக் அப்துல்லா வெளியிட ஆ.இராசா பெற்றுக் கொண்டார். ஹர் ஆனந்த் பதிப்பகம் சார்பில் இந்த புத் தகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விழாவில் பேசிய ஆ.இராசா, சிறையில் இருந்த போது என் தரப்பு நியாயத்தை யாரும் கேட் காததால் புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளேன். அரசி யல் கண்ணாடி அணிந்து 2ஜி குறித்த எனது புத்தகத்தைப் படிக்காதீர்கள் என கேட்டுக் கொண்டார்.

இந்நூல் சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் புத்தக நிலை யத்தில் விற்பனைக்கு கிடைக் கும். தொடர்புக்கு: 7639818254

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner