எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, ஜன. 22- பெட் ரோல், டீசல் விலை விண்ணை முட்டிவிட்டது, மத்திய அரசு மக்களை தொடர்ந்து நசுக்கி வருகிறது, நுகர்வோர்களுக்கு விரோதமாக நடந்து வருகிறது என்று காங்கிரஸ் மூத்த தலை வரும், முன்னாள் நிதி அமைச் சருமான ப.சிதம்பரம் கடுமை யாக சாடியுள்ளார்.

இதுதொடர்பாக ப.சிதம் பரம் டுவிட்டரில்  மத்திய அரசு கடன் வாங்கும் அளவை ரூ. 30 ஆயிரம் கோடி குறைத்து விட்ட தாகக் கூறி வருகிறது. ஆனால், இந்துஸ்தான் பெட்ரோலியம் (எச்.பி.சி.எல்.) நிறுவனத்தின் 51.1 சதவீத பங்குகளை வாங் கியதற்காக ஓஎன் ஜிசி நிறுவனம் அரசுக்கு ரூ.30 ஆயிரம் கோடி கொடுக்கிறது. அரசு கடன் பெறுவதை குறைத்ததற்கும், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அர சுக்கு பணம் கொடுப்பதற்கும் வேறுபாடு ஒன்றும் இல்லை. இரண்டும் ஒன்று தான். இதன் மூலம், ரூ. 30 ஆயிரம் கோடி நிதிப்பற்றாக்குறை வரத்தான் செய்யும்.நாட்டில் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டி விட்டது. ஆனால், மத்திய அரசு தொடர்ந்து மக்களை நசுக்கி வருகிறது. நுகர்வோர்களுக்கு விரோதமாகவே செயல்பட்டு வருகிறது.மக்களுக்கு பயன் கிடைக்கும் வகையில், நிம்மதி கிடைக்குமாறு, பெட்ரோல், டீசல் எரிபொருட்களை சரக்கு மற்றும் சேவை (ஜி.எஸ்.டி.) வரம்புக்குள் மத்திய அரசு ஏன் கொண்டு வரக் கூடாது? பெட் ரோலுக்கும், டீசலுக்கும் மிகப் பெரிய அளவுக்கு உற்பத்தி வரி விதித்து மத்தியஅரசு மிகப் பெரிய வரி வருவாயை அறு வடை செய்து வருகிறது. ஆனால், அந்த வருவாய் முழுவதும் தேவை யில்லாமல் வீணாகச் செலவு செய்யப்படுகிறது என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner