ஜாதியை ஒழிப்பதில் நான் அதிக தீவிர நம்பிக்கையுடையவன். அது சம்பந்தமாக என்னாலான பிரச்சாரமும் செய்து வருகிறேன். சமத்துவம், நியாயம் போன்ற கொள்கைகளையே அடிப்படையாகக் கொண்டு உண்டாக்கப்படும் புதிய சமூகம், சுதந்திர இந்தியாவுக்கு அறிகுறியாகும். சிலர் தீண்டாமையை மாத்திரம் வெறுக்கிறார்களே ஒழிய, சமபந்தி போஜனத்தையும், கலப்பு மணத்தையும் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். அத்தகைய மனோபாவம் நான் கொண்டவனல்ல. நாம் எல்லோரும் ஒன்று என்றால் மனிதனுக்கு மனிதன் எவ்வித வேற்றுமையும் இருத்தலாகாது.
("குடிஅரசு" 26.10.1930 பக்கம் 17)