எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லக்னோ, ஜன 24 சாமியார் ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்தது முதல் கடந்த டிசம்பர் வரையிலான 10 மாதங்களில் காவல் துறையின் என்கவுன்டர் என்ற பெயரில் 921 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மாதத் திற்கு 10 பேர் வீதம் தொடர்ந்து காவல்துறையால் கொல்லப் பட்டு வருகின்றனர். இப்படி கொல்லப்பட்டவர்களில் வெறும் 30 பேர் மட்டுமே குற்றவாளிகள் என்பதும், மற்ற வர்கள் மீதான குற்றவழக்குகள் குறித்து இதுவரை காவல் துறை சார்பில் உறுதிப்படுத்தப் படவில்லை என்பதும் குறிப் பிடத்தக்கது. மேலும் இக் கொலைகள் அனைத்தும் இசு லாமியர்கள் மற்றும் சிறுபான் மையினர் அதிகம் வசிக்கும், வடமேற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் அதிகம் நடை பெற்றுள்ளது என்பதும் குறிப் பிடத்தக்கது.

உத்தரப்பிரதேச காவல் துறை ஜனவரி 5-ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட் டிருந்தது. அந்த அறிக்கையில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 921- பேரை உ.பி. காவல்துறையினர் என்கவுன்டர் செய்துள்ள தாகவும், இவர்களில் 30 பேர் தேடப்படும் குற்றவாளிகள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது, இந்த அறிக்கையை ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டிருந்தது.

10 மாதங்களில் 921 என்கவுன்டர்கள்

அதன் தமிழாக்கம் வரு மாறு, “உத்தரப்பிரதேசத்தில் கடந்த 10 மாதங்களில் மாநில காவல்துறையினர் நடத்திய என்கவுண்டர்களில், 921 -பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதாவது மாதம் ஒன்றுக்கு 10 பேர் என்ற வீதத்தில் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவ் வகையான என்கவுன்டர்கள் மார்ச் 20, 2017ஆம் ஆண்டு சாமியார் ஆதித்யநாத் அங்கு முதல்வராக பதவியேற்ற பின், தொடர்கின்றன. இப்படி கொலை செய்யப்பட்டவர்களில்  முக்கியமாக 29 என்கவுன்டர் களில் கொலை செய்யப்பட்ட  30 பேர் மட்டுமே குற்றவாளிகள் - மற்றவர்களது குற்றங்கள் குறித்த விவரங்களை இதுவரை மாநில காவல்துறை உறுதிப் படுத்தவில்லை.

சமேளி மாவட்ட காவல் துறை சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சாலை ஓரத்தில் 4 இளைஞர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரது தலையிலும் குண்டு துளைத்த அடையாளம் காணப்பட்டது. இந்த 4 பேரின் சடலங்களுக்கு சிறிது தொலை வில் காவலர் ஒருவரது சடல மும் இருந்தது. இதுகுறித்து காவல்துறை இணை இயக் குனர் ஆனந்த் குமார் கூறிய தாவது: “சமேளி புறநகர் பகுதி யில் 4 குற்றவாளிகள் இருப்ப தாக எங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்களைக் கைது செய்யச் சென்றோம்; ஆனால் குற்ற வாளிகள் காவல்துறையினரைக் கண்டவுடன் துப்பாக்கியால் சுட்டனர்” என்று தெரிவித்தார்.

இன்னொரு சாதனை என்ன தெரியுமா? தேசிய மனித உரிமை ஆணையம் உ.பி. அரசுக்கு அனுப்பிய தாக்கீதுகள் 9.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner