எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டவோஸ், ஜன. 24 பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப் பில் பாகிஸ்தான் மற்றும் பங் களாதேஷ் நாடுகளைவிட பின் தங்கி 62 ஆம் இடத்தில் இந்தியா உள்ளது.

வாழ்க்கைத் தரம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, எதிர்கால திட்டங்கள் ஆகியவைகளைக் கொண்டு பொருளாதார வளர்ச்சி பொதுவாகக் கணக்கிடப்படு கிறது.  சமீபத்தில் அந்த அடிப் படையில் உலகப் பொருளாதார கூட்டமைப்பு ஆய்வு நடத்தி யது. அந்த ஆய்வில் தயாரிக் கப்பட்ட பட்டியலை இப் போது அந்த அமைப்பு வெளி யிட்டுள்ளது.

அந்தப் பட்டியலில் இந் தியா சென்ற ஆண்டு இருந்த 60ஆம் இடத்தில் இருந்து தற் போது 62 ஆம் இடத்துக்கு வந் துள்ளது.

இந்தியா மிகவும்

பின் தங்கி உள்ளது

அண்டை நாடுகளான நேபாளம் 22ஆம் இடத்திலும், வங்காளதேசம்34ஆம் இடத் திலும் இலங்கை 40ஆம் இடத் திலும்  உள்ளன.    இந்தியாவுடன் எல்லாவற்றிலும்  போட்டியிட்டு வரும் சீனா 26ஆம் இடத்திலும்,  பாகிஸ்தான் 47ஆம் இடத்திலும் உள்ளன. உலக நாடுகளின் பட்டியலுடன் ஒப்பிடும் போது ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியா மிகவும் பின் தங்கி உள்ளது.

உலக பொருளாதார மாநாடு

வளர்ந்து வரும் நாடுகளில் கருங்கடல் நாடுகளில் ஒன் றான லித்துவேனியா முதல் இடத்திலும், வளர்ச்சி அடைந்த நாடுகளில் நார்வே முதல் இடத்திலும் உள்ளன உலக பொருளாதார மாநாடு சுவிசர்லாந்து தலைநகரில் நடந்துகொண்டிருக்கின்றது, இதில் கலந்துகொள்ள மோடி சென்றுகொண்டிருக்கும் போது இந்த புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத் தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner