எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

'பத்மாவத்' திரைப்படத்தை எதிர்த்து வன்முறைகள், கலவரங்கள்

டில்லி, ஜன.26  பாஜக ஆளும் மாநிலங்களில் விரைவில் சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ள தால், பத்மாவதி படத்துக்கு இந் துத்துவாவாதிகள், பாஜக உள்ளிட் டவை கடுமையாக எதிர்த்து வருகின்றன.

பாஜக ஆளும் மாநிலங்களில் பத்மாவதி திரைப்படம் வெளியிடுவதற்கு எதிரான வன்முறைகள் வெடித்துள்ளன. உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவை மாநில அரசு கள்  மீறியுள்ளன. வன்முறைகள், கலவரங்களை தடுக்காமல் அம்மா நில அரசுகளின் காவல்துறை வேடிக்கை பார்த்துள்ளது. இத னால் சட்டம் -- ஒழுங்கை பாதுகாக் காமல் அம்மாநில அரசுகள் நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ள குற்றச்சாற்றுக்கு ஆளாகியுள்ளன.

சஞ்சய் லீலா பன்சாலி இயக் கத்தில் உருவான சரித்திர கதையை அடிப்படையாகக் கொண்ட படம் Ôபத்மாவதிÕ. அப்படத்தில் முசு லிம் மன்னனான அலாவுதின் கில்ஜியை ஜெய்ப்பூர் ராணி பத்மினி வரவேற்று உபசரிக்கும் காட்சி, பாடல் காட்சிகள் இடம் பெற்றன.

இந்துத்துவாவாதிகள், ராஜ புத்திரர் வகுப்பினர், கர்னி சேனா அமைப்பினர் உள்ளிட்ட பலரும் வகுப்பு நல்லிணக்கத்துடன் உள்ள பத்மாவதி படத்தை திரையிடக் கூடாது என்று கடுமையாக எதிர்ப் புத் தெரிவித்து வந்த நிலையில், நீதிமன்றம் அத்திரைப்படம் வெளியிட தடையில்லை என்று கூறியது.

இதன்பின், பிரச்சினைக்குரிய காட்சிகளை நீக்கியும், படத்தின் பெயரை, பத்மாவத் என மாற்றி யும், திரைப்பட தணிக்கை வாரி யம், படத்தை வெளியிட அனுமதி அளித்தது. இந்த படத்துக்கு தடை விதிக்க கோரி, குஜராத், மத்தி யப்பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் தாக்கல் செய்த மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதன்பிறகும் குஜராத், ராஜஸ் தான், உத்தரப்பிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டது. மத்திய திரைப்படத் தணிக்கைத்துறை சான்றளித்தபின்னர் அத்திரைப் படத்தை திரையிட எந்த ஒரு  மாநிலத்திலும் தடை விதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உறுதியாக கூறியதுடன் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய  பொறுப்பும், கடமையும் மாநில அரசுகளுக்கு உண்டு என்றும் கூறியது.

இந்நிலையில், நேற்று (25.1.2018) Ôபத்மாவத்Õ திரைப் படம் நாடெங்கும் வெளியிடப் பட்டது. பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராட்டிரா, அரியானா உட்பட பல மாநிலங்களில் வன்முறைக் கலவரங்கள், திரையரங்கங்கள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு, சூறையாடப்பட்டன. பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் தீக்கிரை யாக்கப்பட்டன.

பாஜக ஆளும் அரியானா மாநி லத்தில் கோரேகான் நகரில் பள்ளி பேருந்துமீது வன்முறையாளர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். பேருந் தில் இருந்த பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் தங்களைக் காப் பாற்றுமாறு காவல்துறையினரை நோக்கி கதறினார்கள். படுகாய மடைந்த பள்ளி மாணவர்கள் மருத் துவமனையில் அனுமதிக்கப்பட் டனர்.

வன்முறை நிகழ்வுகளையடுத்து பள்ளிகள் மூடப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டன. கர்னி சேனா அமைப்பினருடன் இணைந்த இந் துத்துவா வன்முறைக்கும்பலால் அரசு பேருந்துகள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. பாஜகவினரும் கர்னி சேனா அமைப்புடன் இணைந்து வன்முறை வெறியாட் டங்களை அரங்கேற்றியுள்ளனர்.

பாஜக ஆளும் மாநிலங்களில்  காவல்துறை முன்னெச்சரிக்கை யுடன் வன்முறைகளை தடுத்து நிறுத்த தவறியதுடன், வன்முறை கலவரங்களின்போது வேடிக்கை பார்த்த அவலம் நடந்துள்ளது.

பத்மாவத் படம் வெளியிடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த வன்முறையை தடுக்க தவறியதாக, நான்கு மாநில அரசுகள்மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

வன்முறையை தடுக்க தவறிய, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகள்மீது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கோரி, மனு தாக்கல் செய் யப்பட்டு உள்ளது.

காங்கிரசைச் சேர்ந்த, தெக்சீன் பூன்வாலா தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டதாவது:

ராஜஸ்தான், அரியானா, குஜ ராத், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில், பத்மாவத் படம் வெளியிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த வன்முறையில், பொது சொத்துகள் சேதமடைந்து உள்ளன.

சட்டம் -- ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது மாநில அரசின் கடமை என உச்சநீதிமன்றம் கூறியும், வன் முறையை அந்த மாநில அரசுகள் தடுக்கவில்லை. அந்த அரசுகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதே போல், வழக்குரைஞர், வினீத் தண்டா தாக்கல் செய்துள்ள மனுவில், 'பத்மாவத் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, வன்முறை யில் ஈடுபடும் கர்னி சேனா அமைப்பினர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட் டுள்ளது. இந்த இரு மனுக்களும், இம்மாதம் 29ஆம் தேதியன்று விசாரணைக்கு வருகின்றன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner