எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குமரி மாவட்டம் செண்பகராமன் புதூர் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில்

சட்ட விரோதமாக பிள்ளையார் சிலையை வைத்துக்  கலகம் செய்வதா?

புகார் கொடுத்தும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

நடவடிக்கை எடுக்காவிட்டால் வீதிமன்றம் - நீதிமன்றங்களில் பரிகாரம் காணப்படும்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம் செண்பகராமன் புதூரில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் சட்ட விரோதமாக தந்தை பெரியார் சிலையருகே பிள்ளையார் கோயில் கட்டுவதைத் தடுக்காவிட்டால், சிலையை அகற்றாவிட்டால் வீதிமன்றம், நீதிமன்றங்கள் வாயிலாகப் பரிகாரம் காணப்படும். மாவட்ட ஆட்சியரிடம் முறைப்படி புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மானமிகு சுயமரியாதைக் காரரான முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது, ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்புச் சிந்தனையின் அடிப்படையில் தந்தை பெரியார் கொள்கையை ஆக்கப் பூர்வமாக செயல்படுத்தும் வகையில் பெரியார் நினைவு சமத்துவபுரங்களை ஏற்படுத்தி  சமூகப் புரட்சித் திசையில் ஒரு மைல் கல்லை உருவாக்கினார்.

மொத்தம் நூறு வீடுகள்

மொத்தம் நூறு வீடுகளில் ஆதி திராவிடர்களுக்கு - 40, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு - 25, மிகவும் பிற்படுத் தப்பட்டவர்களுக்கு - 25, மற்றவர்களுக்கு (உயர் ஜாதியினர் உட்பட) 10 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

பிற்காலத்தில் ஒவ்வொரு பெரியார் நினைவு சமத்துவ புரத்திலும் தந்தை பெரியார் மார்பளவு சிலைகளும் அமைக்கப்பட்டன.

பொது மயானம் உண்டு;

வழிபாட்டுத் தலங்கள் கூடாது

ஜாதி வாரி சுடுகாடுகள், இடுகாடுகள் கிடையாது - பொது மயானமே இருக்கும். அதே நேரத்தில் எந்த மதத்தைச் சேர்ந்த வழிபாட்டுத் தலமும் இருக்கக் கூடாது. (ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியியினர் நலத்துறை (நிஎ4) நாள் 22.10.1997) (தனிப்பட்ட முறையில் வீட்டுக்குள்  வழிபாடு செய்து கொள்ளத் தடையில்லை)

இந்தியாவிலேயே இதுபோன்ற ஒரு திட்டம் தமிழ் நாட்டில் திராவிட ஆட்சியில் மட்டுமேதான் உண்டு.

2011இல் போச்சம்பட்டியில் நடந்தது என்ன?

இதனைச் சீர்குலைக்கும் வகையில் கடந்த 2011ஆம் ஆண்டில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியையடுத்த போச்சம்பட்டி ஊராட்சியில் செயல்பட்டு வந்த பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் இரு கோயில்களை அமைக்கும் வேண்டாத வேலையில், அரசு விதிகளுக்கு முரணாக சிலர் ஈடுபட்டார்கள்.

உடனடியாக திராவிடர் கழகம் தலையிட்டு அரசு அதிகாரிகளிடம் முறையிட்டவுடன் உசிலம்பட்டி கோட் டாட்சியர், வட்டாட்சியர் தலையிட்டு போச்சம்பள்ளி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டிருந்த 'சாமி' சிலைகள் அகற்றப்பட்டன. அதைப் பாராட்டி 'விடுதலை'யில் அறிக்கையினையும் வெளியிட்டு இருந்தோம் ('விடுதலை' 11.7.2011)

கன்னியாகுமரி மாவட்டத்தில் விஷமம்!

இப்பொழுது ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை வட்டம் செண்பகராமன் புதூரில் உள்ள  பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் சில மதவாத பிற்போக்கு சக்திகள் பிள்ளையார் கோயில் அமைக்கும் விஷம வேலையில் ஈடுபட்டன. மேடைகளும் அமைக்கப்பட்டன.

புகார் அளிக்கப்பட்டும் மாவட்ட ஆட்சியர் செயல்படாதது ஏன்?

திருநெல்வேலி மண்டல திராவிடர் கழக செயலாளர் தோழர் கோ. வெற்றிவேந்தன் உடனடியாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் 9.1.2018 அன்று எழுத்து மூலமாகப் புகார் செய்துள்ளார்.

'விடுதலை'யிலும் படத்துடன் வெளியிடப்பட்டு எச்சரிக்கவும்பட்டது

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்,  கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலர், தோவாளை வட்ட வட்டாட்சியர், ஆரல்வாய்மொழி காவல்துறை ஆய்வாளர் ஆகியோருக்குப் புகாரின் நகல் மனுவாகவும் அளிக்கப்பட்டது.

9.1.2018 அன்று கொடுக்கப்பட்ட புகார் மனுவின்மீது மாவட்ட ஆட்சியரோ, காவல்துறையோ எந்தவித நட வடிக்கையையும் எடுக்காத காரணத்தால், சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட பீடத்தை அகற்றாத காரணத்தால் அடுத்த கட்டமாக நேற்று முதல் நாள் (25.1.2018) அன்று இரவோடு இரவாக பிள்ளையார் சிலையை தந்தை பெரியார் சிலையையொட்டி வைத்துள்ளனர்.

இதுகுறித்தும் தோவாளை (இ) பூதப்பாண்டி வட் டாட்சியருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது (26.1.2018).

உடனே அப்புறப்படுத்துக!

மதக்கலவரத்தைத் தூண்டும் வகையிலும், சட்ட விரோதமாகவும் வைக்கப்பட்ட பிள்ளையார் சிலையை அதன் பீடத்தோடு உடனடியாக அகற்றுமாறு வலியுறுத்து கிறோம்.

தவறும் பட்சத்தில் வீதிமன்றம், நீதிமன்றம் வாயி லாக பரிகாரம் தேடப்படும் என்று தெரிவித்துக் கொள் ளப்படுகிறது.

உரிய நேரத்தில் மாவட்ட ஆட்சியரும், காவல்துறையும் செயல்படாத காரணத்தால்தான் இந்த விபரீதம் நடந் திருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுவது எங்களின் கடமை யாகும்.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் கன்னியா குமரி மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு, உடனடி யாகத் தலையிட்டு ஆவன செய்ய வேண்டுமாயும் வலியு றுத்துகிறோம்.

 

கி. வீரமணி
தலைவர்,        திராவிடர் கழகம்

சென்னை
27.1.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner