எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இதுதான் இந்துத்துவா கல்வியோ!

பொறியியல் கல்லூரிகளில் சீரமைக்கப்பட்ட பாடத் திட்டத்தில் வேதங்கள், புராணங்கள், யோகா பாடங்களாம்

டில்லி, ஜன.27 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் களுக்கு ஏ.அய்.சி.டி.இ. உத்தர வின்படி சீரமைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் வேதங்கள், புராணங்கள், யோகா ஆகிய வற்றை பாடங்களாக இணைத் திட வேண்டும் என்று குறிப் பிடப்பட்டுள்ளதாம்.

மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்த நாள் முதல் இந்துத்துவாத் திணிப்பு என்பது பல திக்கிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக கல்வித்துறையில் மத்திய மனித வள மேம்பாட் டுத்துறை அமைச்சகத்தின் சார் பில் தொடர்ச்சியாக இந்துத் துவா திணிப்புகள் நடந்து வரு கின்றன. பள்ளிகளில் ஆசிரியர் தினத்தை Ôகுரு உத்சவ்Õ என் றது. மத்திய அரசுப்பள்ளிகளில் கேந்திரிய வித்யாலயா பள்ளி களில் ஜெர்மன் மொழிப் பாடத்தை நீக்கிவிட்டு சமஸ் கிருத மொழிப்பாடத்தை கட் டாயமாக்கியது. சிபிஎஸ்இ பாடத்திட்ட பள்ளிகளில் சமஸ் கிருதப்பாடம் கட்டாயம் ஆக் கியது. தற்பொழுது ஏ.அய்.சி. டி.இ. சார்பில் வெளியிடப் பட்டுள்ள தகவலின்படி,

பன்னாட்டு அறிவியல் பார் வையில் இந்தியாவின் பங்க ளிப்பை உணர்த்தும்வண்ணம் இந்திய தத்துவங்கள், மொழி மற்றும் யோகாவுடன் பழங ¢கலைகள் இந்திய பழைமை யான அறிவை புகட்டக்கூடிய பாடங்களாக அளிக்கப்பட உள்ளது என்று ஏ.அய்.சி.டி.இ. குறிப்பிட்டுள்ளது.

பல்வேறு பிரிவுகளைக் கொண்டுள்ள பொறியியல் துறையில் பொறியியல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கணினி, இணையம், புல்லட் ரயில் தொழில்நுட்பங்கள் உள் ளிட்ட பல்வேறு நவீன அறி வியல் பாடங்கள் பயிற்றுவிக் கப்பட்டு வருகின்றன. அவற் றுடன் வேதங்கள், புராணங்கள், தர்க்க சாஸ்திரங்கள் ஆகியவை யும் கற்பிக்கப்பட உள்ளதாக அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி குழு (ஏ.அய்.சி.டி.இ.) குறிப்பிட்டுள்ளது.

அரசமைப்புச்சட்டம், சுற்று சூழலியல் உள்ளிட்ட பாடங் களும் கட்டாயமாக்கப்படும் என்றும் இந்த கல்வியாண்டு முதலே நடைமுறைப்படுத்தப் படும் என்றும் ஏ.அய்.சி.டி.இ. குறிப்பிட்டுள்ளது.

பிரகாஷ் ஜாவடேகர்

மத்திய மனித வள மேம் பாட்டுத்துறை அமைச்சர் பிர காஷ் ஜாவடேகர் கூறியதாவது:

“மாணவர்களின் உரிமை களின்படி, மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தை அளிக்கும் வகையில், மாதிரி பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டு சீர மைக்கப்படும். சமுதாயத்துடன் தொழில் நிறுவனங்கள் இணைந்திருப்பதற்கு பொறியியல் பட்டதாரிகள் ஒரு பால மாக இருப்பதற்கு சீரமைக் கப்பட்ட பாடத்திட்டம் உத வும். தொழிற்சாலைகளின் தேவைக்கேற்ப, ஆண்டுதோ றும் பாடத்திட்டத்தில் மாற் றங்கள் செய்யப்படும்.’’ என்றார்.

சிந்தனை மற்றும் பகுத் தறிதல் மற்றும் அனுமானங்கள் கல்விக்கான அடிப்படைக் கோட்பாடுகளாக உள்ளன என்று கல்வியின் நோக்கமாக கூறப்படுகின்றது.

கான்பூர் அய்.அய்.டி. கணினி அறிவியல் துறைப் பேராசிரியர் தீரஜ் சங்கி கூறு கையில், “துறைக்கு தொடர்பில் லாதவற்றை கற்பிப்பதற்கு எல்லை கிடையாது என்றாலும், அதைக் கட்டாய மாக்கக்கூடாது’’ என்றார்.

செய்முறைத் தேர்வு

மதிப்பெண் குறைப்பு

ஏ.அய்-.டி.சி.இ.யின் புதிய பாடத்திட்டத்தின்படி, ஆய்வக செய்முறைத் தேர்வு மதிப் பெண்கள் 220இலிருந்து 160ஆக குறைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பொறியியல் கல் லூரிகளிலிருந்து பட்டதாரிகள் திறமையுடன் வெளிவரவேண் டும் என்று தொழிற்சாலைகள் எதிர்பார்த்துக் கொண்டிருக் கின்றன. பொறியியல் பட்ட தாரிகளில் பெரும்பான்மை யோர் போதிய பயிற்சிகளின் மையால், வேலைவாய்ப்பின்றி உள்ளனர்.

நாடுமுழுவதும் மூவாயிரம் பொறியியல் கல்வி நிறுவ னங்கள் உள்ளன. ஆண்டுதோ றும் 70ஆயிரம் பொறியாளர்கள் உருவாகின்றனர். அவர்களில் பாதி அளவினருக்குத்தான் வேலை வாய்ப்பு கிடைக்கிறது.

2015, 2016ஆம் ஆண்டில் ஏழு லட்சத்து 58ஆயிரம் பொறி யாளர்களில் மூன்று லட்சத்து 34ஆயிரம் பேர் மட்டுமே கல் லூரிகளில் நேர்காணல்மூலமாக பணிவாய்ப்பு பெற்றனர் என்று ஏ.அய்.சி.டி.இ. புள்ளிவிவரம் கூறுகின்றது.

ஏ.அய்.சி.டி.இ. தலைவர்

அனில் சகஸ்ரபுத்தே

ஏ.அய்.சி.டி.இ. தலைவர் அனில் சகஸ்ரபுத்தே கூறியதா வது: “அனைத்து மாணவர் களும் கல்லூரியில் சேர்க்கப் படும் போதே, அவர்களுக்கு அடிப்படையான பயிற்சி கட் டாயமாக அளிக்கப்படுகிறது. மேலும் அவர்களுக்குத் தொழில் நுட்ப கல்விக்குரிய  மொழிப்பயிற்சியும் அளிக்கப் படுகிறது. நிர்வாக மேலாண்மை மற்றும் முதுநிலை பட்டய மேலாண்மை கல்விக்கான நன்மதிப்பு புள்ளி கள் குறைந்தபட்சம் 102ஆக இருக்கின்றன’’ என்றார்.

ஆண்டுதோறும் பாடத் திட்டங்களை மேம்படுத்திட பல்கலைக்கழகங்கள் குழு அமைக்க வேண்டும் என்று  பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களிடம் ஏ.அய்.சி.டி.இ. சார்பில் கேட்டுக் கொள்ளப் பட்டது. நிர்வாக ஒதுக்கீட்டுக் குரிய பாடத்திட்டங்களிலும் மாற்றங்கள் செய்யப்படுகின் றன. அவர்களும் அதை ஏற் றுக்கொண்டு, புதிய பாடத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒப்புக்கொண்டனர் என்று ஏ.அய்.சி.டி.இ. அலுவலகத் தரப்பினர் கூறியுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner