எழுத்துரு அளவு Larger Font Smaller Font

'நீட்' தேர்வு: தேவை தமிழ்நாட்டுக்கு விதி விலக்கு!

பிப்ரவரி 5 - மாவட்டத் தலைநகரங்களில்

மக்கள் பெருந் திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

பிப்ரவரி 10ஆம் தேதி மாணவர்கள் ஆலோசனைக் கூட்டம்

சென்னை, ஜன.28 மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு 'நீட்' நுழைவுத் தேர்விலிருந்து தமிழ் நாட்டுக்கு விலக்குக் கோரும் தமிழ்நாடு அரசின் இரு சட்டத் திருத்த மசோதாக்களுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கக் கோரி மாவட்டத் தலைநகரங்களில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

ஜனநாயக உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பில் 27.1.2018 சனியன்று மாலை சென்னை பெரியார் திடலில் அனைத்துக் கட்சிகள், சமூக அமைப்புகள், கல்வியாளர்களின் ஆலோசனைக்கூட்டம் திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

பிப்ரவரி 5ஆம் தேதி ஆர்ப்பாட்டம்

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

1.            மருத்துவக் கல்லூரிகளில், பல் மருத்துவக் கல்லூரி களில் சேர்வதற்கான Ôநீட்Õ நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக்கோரும் இரு சட்டத்திருத்த மசோதாக்களுக்கும் உடனடியாக குடியரசுத்தலைவர் ஒப்புதலைப் பெறும் முயற்சியில் தமிழ்நாடு அரசு முழு மனதோடு தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று இக்கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.

2.            மருத்துவக் கவுன்சில் ஆஃப் இந்தியா என்ற அமைப்பை மாற்றி, தேசிய மருத்துவ ஆணையம் என்று உருவாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று இக்கூட்டம் மத்திய அரசை வலி யுறுத்துகிறது.

3.            உயர் மருத்துவக் கல்வி இடங்களில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 100 விழுக்காடு இடங்களையும் தமிழ்நாட்டைச்சேர்ந்த மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று இக்கூட்டம் வற்புறுத்துகிறது.

4.            அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவக் கல்வியில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட எம்.சி.அய். விதிமுறையில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசை இந்தக் கூட்டம் வலியுறுத்துகிறது.

5.            இவற்றையெல்லாம் முன்னிறுத்தி வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி திங்கள்கிழமை காலை அனைத்து மாவட் டத் தலைநகரங்களிலும் பெருந்திரள் ஆர்ப்பாட் டத்தை நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

பிப்ரவரி 10 - மாணவர்கள் பிரதிநிதிகள் கூட்டம்

6.            அரசியல் கட்சிகளின், சமூக அமைப்புகளின் மாண வர்கள், இளைஞர்கள் அமைப்பினர் இந்த மிக முக்கியத்துவம் வாய்ந்த சமூக நீதிப் பிரச்சினைகளைக் கையில் எடுத்துக்கொண்டு நாடு தழுவிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வது என்றும், முதற்கட்டமாக வரும் பிப்ரவரி 10ஆம் தேதி சனி காலை 10.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் மாணவர்கள், இளைஞர்கள் அமைப்புப் பிரதிநிதி களின் ஆலோசனைக்கூட்டத்தைக் கூட்டுவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

பங்கேற்றோர்

கூட்டத்தில் பங்கேற்றுக் கருத்துகள் கூறியவர்கள் வருமாறு:

கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்

டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி., செய்தித் தொடர்பாளர் திமுக

சு.திருநாவுக்கரசர், தலைவர், தமிழ்நாடு காங்கிரசு கமிட்டி

இரா.முத்தரசன், செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

ஆ.வந்தியத்தேவன், அமைப்புச் செயலாளர், மதிமுக.

வன்னியரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி

அ.பாக்கியம், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி

ப.அப்துல்சமது, மனிதநேய மக்கள் கட்சி

குணங்குடி ஆர்.எம்.அனிபா, தமுமுக

கோ.கருணாநிதி, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு

டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம்

எம்.ஜெய்னுல் ஆபிதீன், இந்திய யூனியன் முசுலீம் கட்சி

சுப.வீரபாண்டியன், திராவிட இயக்க தமிழர் பேரவை

பேராயர் எஸ்றா சற்குணம், இந்திய சமூகநீதி இயக்கம்

அமீர் அம்சா, எஸ்.டி.பி.அய்.

கலி.பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம்

வீ.குமரேசன், வெளியுறவுச் செயலாளர், திராவிடர் கழகம்

வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டல கழக செயலாளர்

சு. குமாரதேவன், தலைவர், வடசென்னை மாவட்ட திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner