எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மன்னார்குடி, ஜன.28  திரு வாரூர் மாவட்டம், மன்னார் குடியில்  நேற்று (27.1.2018), நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டபின்  ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந் தாமன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சங்கராச்சாரியாருக்கு கண்டனம்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்வது என்பது மரபு. அத்தகைய மரபை விஜயேந்திரர் கடைப் பிடிக்காதது தவறான செய லாகும். வைரமுத்து கூட ஆண்டாள் குறித்த கருத்து கூறியதற்காக 2 முறை வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஆனால், விஜயேந்திரர் வருத்தம் தெரிவிக்கவில்லை. மாறாக அதனை நியாயம் கற்பிக்க முயல்வதை ஏற்றுக் கொள்ள இயலாது. நீட்தேர்வில் இருந்து தமிழகம் நிரந்தர  விலக்கு பெறுவதற்கு  தி.மு.க., அதிமுக, காங்கிரஸ் போன்ற 3 கட்சிகள் இணைந்து சட்ட சபையில் ஒரு மனதாக தீர் மானம் கொண்டு வந்து  அதனை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தனர்.  ஆனால், மத்திய அரசு குப்பை தொட் டியில் போட்டுவிட்டது. அதற் காக மத்திய அரசை தட்டிக் கேட்க வேண்டிய மாநில அரசு, நீட் தேர்வுக்காக பயிற்சி மய்யங்களை நடத்துகிறது. தமிழக மாணவர்களின் நல னில் அக்கறை செலுத்தாத மாநில அரசு   எதற்காக இருக் கிறது. மாநில அரசு போட்ட சட்டத்தை மத்திய அரசு ஒப்புக் கொள்ளைவில்லை என்றால் எதற்கு சட்டசபை, அதைக் கலைத்துவிடுங்கள்.  டில்லி தர்பார் நேராக ஆட்சி நடத்தட் டும்.   மாநில அரசு கொண்டு வந்த தீர்மானத்தை நடைமுறை படுத்தியிருந்தால் அனிதா மரணம் நிகழ்ந்திருக்காது. பேருந்து கட்டண உயர்வில் நீதிமன்றம் தலையிடாதது சரி யானது. அதேபோல், நீதிமன் றங்களில் தாக்கல் செய்யப்படும் பொது நல வழக்குகள் ஜன நாயகத்திற்கு உறுதுணையாக அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner