எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பெங்களூரூ ஜன 29 அபாயகரமாக சென்று கொண்டு இருக்கும் வேலைவாய்ப்பு பற்றி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய மோடி பக்கோடா விற்றால் தினசரி 200 ரூபாய் வருமானம் பெறலாம், ஆனால் அரசிடம் வேலை கேட்டு ஏன் நிற்கிறார்கள் என புரியவில்லை என்று கூறியிருந்தார்.

இது குறித்து பல தலைவர்கள் கடுமையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்  காங்கிரசு மூத்த தலைவர்

ப. சிதம்பரம் கருத்து தெரிவித்த போது, வேலை வாய்ப்பு உருவாக்குவதை பற்றி பிரதமர் மோடிக்கு 'ஒன்றுமே தெரியவில்லை' என கூறிய அவர், வேலைவாய்ப்பு உருவாக்குவது பற்றிய பிரதமரின் பேச்சுகள் பொதுமக்களை முட்டாளாக்குவது போல உள்ளது என்றார். இந்தியப் பொருளாதாரம் வேலை வாய்ப்பை அதிகரிக்காமல் வீழ்ச்சியடைந்து வருவ தாகவும் குற்றம் சாட்டினார். "பக்கோடா விற்பது கூட ஒரு வேலை தான் என்று பிரதமர் சொல்கிறார். அப்படிப் பார்த்தால் பிச்சை எடுப்பதுகூட ஒரு வேலை தானே. வறுமையால் பிச்சையெடுக்கும் ஏழைகள், ஊனமுற்றோர்களை வேலை செய்வதாக கணக் கெடுத்துக் கொள்ளலாமா? உண்மையிலேயே கடந்த 3 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம், வேலை வாய்ப்பில் வளர்ச்சி இல்லாமல் சுமாராக வளர்ந்து வருகிறது. இந்த அரசுக்கு வேலைவாய்ப்பு களை உருவாக்குவது பற்றி எதுவுமே தெரியவில்லை" என்று கூறினார்.

ஹர்திக் பட்டேல், "டீக்கடைக்காரர் இப்படித்தான் பேசுவார். அவர்கள்தான் பக்கோடா கடை வைத்தால் வேலைவாய்ப்பு உருவாகிவிட்டதாக நினைப்பார்கள். அவர் கண்டிப்பாக பொருளாதாரம் குறித்து எதுவுமே தெரியாமல் இருக்கிறார்" என்று கடுமையாக விமர்சித் திருந்தார்.

பாஜக அலுவலகம் முன் பக்கோடா கடை போட்ட இளைஞர்கள்

இந்த நிலையில், பெங்களூரு இளைஞர்கள் அங்குள்ள பா.ஜ.க அலுவலகம் முன் பக்கோடா கடை திறந்து வித்தியாசமான போராட்டம் நடத்தினர். அவர்கள், இளைஞர்களுக்கு புது, வேலை வாய்ப்பை உருவாக்காத மோடி, பக்கோடா விற்கச் சொல்கிறார். இதைக் கண்டித்தே இந்தப் போராட்டத்தை நடத்து கிறோம் என்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner