எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

27.1.2018 சனிக்கிழமை மாலை சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் கூட்டப் பெற்ற ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்புக் கூட்டத்தில் 'நீட்' தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் வரும் 5.2.2018 திங்கள்கிழமை காலை 11 மணிக்கு அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் (கழக மாவட்டங்கள் அல்ல) மக்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மாநிலக் கழகப் பொறுப்பாளர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், அமைப்புச் செயலாளர்கள் மண்டல, மாவட்ட திராவிடர் கழகத் தலைவர்கள், செயலாளர்கள், உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்களையும் ஆங்காங்கே தொடர்பு கொண்டு, சமூக நீதிக் களத்தில் மிக முக்கியமான கண்டன ஆர்ப்பாட்டம், மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டமாக வெற்றிகரமாக நடந்தேற அனைத்து முயற்சிகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். முக்கியம்! முக்கியம்!!

- கி. வீரமணி,

தலைவர், திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner