எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, ஜன.29 ஆதார் ஒரு அடையாள ஆவணம் மட்டுமே என ஆதார் ஆணையம், விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து இந்திய பிரத்யேக அடையாள ஆணையத்தின் (யு.அய்.டி.ஏ.அய்.,) சி.இ.ஓ., அஜய் பூஷன் பாண்டே டுவிட் டரில் அளித்த பதிலில் தெரிவித்ததாவது: ஆதார் விவரங்களில் கை ரேகை பதிவு, கண் விழி படலம் மற்றும் புகைப்படம் மட்டுமே பதிவுசெய்யப்படுகிறது. இதன்மூலம் போலி அடையாள ஆவணம் உருவாக்கப்படுவது தடுக்கப்படும்.

வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தால் கணக்கு விவரங்களை யு.அய்.டி.ஏ.அய்.,யால் பார்க்க முடியாது. ஆதார் அடையாள ஆவணம் மட்டுமே. வங்கி கணக்கை மத்திய அரசு முடக்கும் என்ற அச்சம் மக்களுக்கு வேண்டாம். ஆதார் தகவல்கள் எதுவும் கசியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner