எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மும்பை, ஜன.29  மராட் டிய மாநிலத்தில் அரசுக்கு, மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதி பெறா மல் சட்ட விரோதமாக கட் டப்பட்ட மத வழிபாட்டிடங் களை இடித்துவிட வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம் பரில் மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையடுத்து, ரயில்வேத்துறைக்கு சொந்த மான இடங்களில்  அனுமதி பெறாமல் 166 இடங்களில் கோயில்கள் கட்டப்பட்டுள் ளதை அடையாளம் கண்டு அவற்றை இடிப்பதற்கு மத்திய ரயில்வேத்துறையின் மும்பை கோட்டம் முடிவெ டுத்துள்ளது.

மத்திய ரயில்வேதுறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:

“நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவின்படி, மும்பை கோட் டத்துக்குட்பட்ட ரயில்வே குடியிருப்பு, ரயில்வே பணி மனைகள் உள்பட ரயில்வே துறைக்கு சொந்தமான இடங் களில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கோயில்கள் குறித்த பட்டியலை சேகரித்து வருகிறோம்’’ என்றார்.

சட்டவிரோத கோயில்கள் குறித்து பட்டியலிட்டு,  மத வழிபாட்டிடம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் தங் களின் கருத்துகள் அல்லது ஆட்சேபணைகளைத் தெரி விக்க வேண்டும் என்று செய் தித்தாள்களில் மத்திய ரயில்வே துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த சில ஆண்டுகளில் அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக 166 கோயில்கள் அமைக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

சட்ட விரோத கோயில்கள் மும்பை கோட்டத்தில்  கல் யாண் பகுதியில் 36க்கும் மேல் உள்ளன. குர்லா பகுதியில் 12, தாக்குர்லி பகுதியில் 10, வாடி பந்தர் பகுதியில் 8, சத்ரபதி சிவாஜி மகராஜ் ரயில் நிலை யப்பகுதியில் 4 என சட்ட விரோதமாக கட்டப்பட்ட கோயில்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

பைகுல்லா, குர்லா, மான் குர்ட், கல்யாண், பன்வல், ஜெய்சாய், பரேல், குரு தேக் பகதூர் ரயில் நிலையம், தாதர் மற்றும் தானே உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோத கோயில்கள் அமைக்கப்பட்டிருப் பது பட்டியலிடப்பட்டுள்ளது.

மத்திய ரயில்வேத்துறை யின் மக்கள் தொடர்பு அலு வலர் சுனில் உதாசி கூறும் போது, “நீதிமன்றத்தின் உத் தரவின்பேரில் அனுமதிபெறா மல் கட்டப்பட்ட மத வழி பாட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதன் மீதான அடுத்தகட்ட நடவ டிக்கை எடுக்கப்பட உள்ளது’’ என்றார்.

எல்ஃபின்ஸ்டோன் சாலை யில் ரயில்வே மேம்பாலத்தில் நெரிசல் ஏற்பட்டதையடுத்து 23பேர் உயிரிழந்தார்கள்.  பல ரும் படுகாயமடைந்தார்கள். அதனையடுத்து, ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் சர்ச் கேட் ரயில் நிலையத்தில் கூடிய ரயில்வே துறையினரின் கூட்டத்தில் பல்துறை வல் லுநர்களைக்கொண்ட குழுக் கள் அமைக்கப்பட்டது. மும்பை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டு அளிக்கப் பட்ட அக்குழுக்களின் ஆய்வ றிக்கையின்படி,

“ரயில் நிலைய வளாகப் பகுதிகளில் பயணிகளுக்கு வசதிக்குறைவு ஏற்படுத்தும் வண்ணம் அனுமதி பெறப் படாத வழிபாட்டிடங்கள் அமைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

சில இடங்களில் வழி பாட்டிடங்கள் ரயில்வேத்துறை யில் பணியாற்றிவரும் பணி யாளர்களால் அனுமதிபெற்று பராமரிக்கப்பட்டு வருவதும் கண்டறியப்பட்டது.

பழைமையான கோயில் களாக இருந்தாலும் இடிக்கப் படுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த மூத்த அலுவலர் கூறியதாவது:

Òநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு சட்ட விரோத கோயில் களில் எவ்வளவு பழைமை யானவை என்பது ஒரு பொருட்டே அல்ல’’ என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner