எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லண்டன், ஜன.30 லண்டன் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் சார்பாக தமிழ்த் தாய் வாழ்த்தையும், தமிழ் மொழியை "நீச பாஷை" என்றும் சொல்லி அவமதித்த காஞ்சி சங்கரமடத்தின் இளைய சங்கராச்சாரி  "விஜயேந்திரனை" கண்டித்தும், ஆண்டாளின் பெயரில் தமிழ்நாட்டு மக்களை இழிவுப் படுத்திய பார்ப்பன வெறி கொண்ட ஹிந்துக் களை கண்டித்தும் தமிழர்கள் ஹிந்துக்கள் அல்ல என்கிற உண்மையை உணர்த்திடும் நோக்கில் நேற்று இரவு சரியான திட்டமிடு தலின் பேரில் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்ட தோழர்கள், மற்றும் தமிழ் தோழமை நண்பர்களும் இணைந்து தங்களது எதிர்ப் பினை கடுமையான எதிர் கருத்துக்களுடன் அமைதி வழியில் முன் வைத்தனர். பார்ப் பனீயம் மற்றும் ஹிந்துத்துவம் அரண்டு போய் கருத்தியல் வாதத்தை ஏற்காமல் திரிபு வாதத்தில் இறங்கியது. திசை திருப்பலில் இறங்கியது. கொச்சை வார்த்தையில் அர்ச் சனை செய்தது.

திட்டமிடல்

பார்ப்பனீய ஹிந்து ஆதிக்க சக்திகள் ஆண்டாள் எனும் போர்வையில் லண்டனில் கூட்டமாக கூடுகிறார்களா? இல்லையா? என்பது வெளிப்படையாக பொது வெளியில் தெரியாத ஒரு நிலை இருந்தது. இருந்தாலும், அமைதியான கருத்தியல் எதிர்வினையைச் செய்யும் நோக்கில் முன்கூட்டியே தயாராகவே இருந்தனர் பெரியார், அம்பேத்கர் படிப்பு வட்ட தோழர்கள். பத்து நாட்களுக்கு முன் பாகவே  தமிழ் நாட்டு தோழர்களிடம் இருந்து தகவல் வந்துவிட்டது. இப்படி ஒரு கூட்டம் பார்ப்பனர்கள் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு ஏற்பாடு செய்கிறார்கள் பார்ப் பனர்கள் என்று எதிர்வினை அமைதியான முறையில் இருக்க வேண்டும் என்பதற்கும் கருத்தியலை எப்படி பதிவு செய்வது என்றும் தயார் ஆகிக் கொண்டு இருந்தது பெரியார் அம்பேத்கர்  வாசகர் வட்டம்.

ஒன்று கூடல்

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த காஞ்சி மடத்தின் விஜயேந்தரனின் பித்தலாட்டங்களை கண்டித்தும் பார்ப்பன வெறியர்களுக்கு பாடம் கற்பிக்க ஏற்கத்தக்க வாசகங்களை அச்சு அடித்துக் கொண்டு, பறை இசை முழக்கத் தோடு தோழர்கள் இந்திய தூதரகம் முன் ஒன்றுகூடி சென்றனர் பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டத்தினர் முதலில் தோழமையோடு சென்று பேசினர்.

தன்னை 'ராம்ஜி' என்று சொல்லிக் கொண்டு பார்ப்பனீய கும்பலின் பிரதிநிதி ஒருவர் முன்வந்து   ஆண்டாளுக்காக தாங்கள் ஏன் வைரமுத்துவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கி றோம்? என்று விளக்கம் கொடுத்தார். அந்த விளக்கத்தில் ஆண்டாள் சர்ச்சையில் ஹிந்துக் கள் மனம் புண் பட்டிருப்பதாகக் கூறினார். இப்போது புரிகிறது, ஹிந்துக்கள் தமிழர்கள் இல்லை என்ற உண்மையை முன் வைத்ததும் ஏன் பதற்றம் அடைந்தனர்? என்று.

ஆண்டாளை வைரமுத்து விமர்சித்த வார்த்தை தேவதாசி என்றும் அது, தவறு எனவும் ஹிந்துக்களின் மனம் புண்பட்டு  விட்டதாகவும் சொன்னார். நாங்கள் தமிழர்கள் என்றனர் (ஆனால், அதில் நின்ற பாதி பேர் தெலுங்கு பேசிக்கொண்டும், ஹிந்தி பேசிக் கொண்டும் நின்றனர்). வைரமுத்துவின் ரசிகன் என்றும் சொல்லிக்கொண்டார் ஒருவர்.  வைரமுத்து ஹிந்து மதக் கடவுளின் ஆதரவாகத் தானே பேசினார் என்று கேட்ட உடன்.  வைரமுத்து மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் எனக் கூறினார். அமைதியாக போராட்டம் செய்கிறோம் எங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லிச் விட்டு சென்றார்.

அவர்கள் ஆர்ப்பாட்டம் முடியும் வரை ஓரமாக நின்று அவர்களுக்கு இடையூறு இன்றி நின்றிருந்தனர் வாசகர் வட்டத்தினர். அவர்கள் போராட்டம் முடிந்த பிறகு,  எதிர் போராட்டம் செய்யும் போது, இவரே வந்து கூச்சலிட்டு கலகம் செய்யவும் தொடங்கினார். பேச நா இரண்டு உடையாய் போற்றி போற்றி!

எதிர்ப்பின் காரணங்கள்

1. ஆண்டாள் பிரச்சினை தமிழர் பிரச்சினை இல்லை. தமிழர் ஹிந்து இல்லை.

ஆண்டாள் பிரச்சினையில் தேவையில் லாமல் தமிழ்நாட்டில் பார்ப்பன ஹிந்துக்கள் மட்டுமே போராட்டத்தில் குதித்தனர். தமி ழர்கள் எங்கும் போராடவில்லை. போராட்டத் திற்கு வரவும் இல்லை.

இவர்கள், தமிழ்நாடு எங்கள் மதத்தை கொச்சை படுத்தி விட்டது என்று சொல்லிப் பதாகை வைத்து இருந்தனர் தமிழர்களை பொறுக்கிகள் என்று சொன்ன சுப்பிரமணிய சாமிக்கு ஒத்து ஊதினார்கள். தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரனைக் கண்டிப்பதாகவும் அவர்களில் ஒருவர் கூறி னார். என்னிடம் தகவல் சொல்லி இருந்தால் நானும் எல்லா போராட்டத்திற்கும் வந்து இருப்பேன் என்று கூறினார்.

2. தமிழர் பிரச்சினைகளுக்கு முன்வராத ஹிந்துக்கள்.

இதுவரை நடந்த தமிழரின் எந்த அத்தியா வசிய பிரச்சினைக்கும் இந்த பார்ப்பனிய ஹிந்துக்கள் முன் வந்ததில்லை, அதாவது தமிழ்ஈழ இனப் படுகொலை, நீட் பிரச்சினை, மீனவர் படுகொலை, மாணவர் படுகொலை, கல்வி உரிமை, காவிரி உரிமை, முல்லைப் பெரியாறு உரிமை, பாலாற்று உரிமை, கூடங் குளம் போராட்டம், சமஸ்கிருத திணிப்பு எதிர்ப்பு, ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு, அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் உரிமை, ஜல்லிக்கட்டு போராட்டம், மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராட்டம், நெடுவாசல் போராட்டம், கதிராமங்கலம் போராட்டம், ஜாதி ஆணவக் கொலை எதிர்ப்பு போராட்டம், தருமபுரி ஜாதீய ஒடுக்குமுறை எதிர்ப்பு போராட்டம் இப்படி இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். இவை எதற்கும் குரல் கொடுக் கவோ, போராடவோ இவர்கள் வந்ததில்லை.  தமிழனின் எந்த வாழ்வாதார போராட்டங் களுக்கும் வராத இவர்கள் இன்று ஆண்டாளுக் காக மதத்தின்   முகமூடியில் கொடி பிடித்து முழக்கம் போட்டு கொண்டு இருந்தனர். சங்கராச்சாரியார் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு அவமரியாதை செய்ததை, இதே ஆண்டாள் பிரச்சினையை தூக்கிப் பிடிக்கும் பார்ப்பன ஹிந்துக்கள் எதிர்க்கவில்லை. அடுத்த பூனைக் குட்டி வெளியே வந்தது.

அவர்கள் ஆர்ப்பாட்டம் முடியும் வரை ஓரமாக நின்று அவர்களுக்கு இடையூறு இன்றி நின்றிருந்த வாசகர் வட்டத்தினர் அவர்கள் போராட்டத்தை முடித்தவுடன்,  அமைதி வழியில் கொள்கை முழக்கங்களை எழுப்பினர்.  போராட்டத்தில் மய்யப் புள்ளி யாக இருந்தது 'தமிழர் ஹிந்து இல்லை' என்ற உண்மையாகும்.

"நீங்கள் தமிழன் என்றால் லண்டனில் உங்களுக்கு என்ன வேலை? தமிழ்நாட்டுக்கு போக வேண்டியதுதானே" என்று கேட்டனர். "நீங்கள் ஹிந்து என்றால் கிறிஸ்தவ நாட்டில் என்ன வேலை?" என்று பதில் கேள்வி கேட் டதற்கு, வாய் மூடி மவுனித்தனர்.

"நீங்கள் போராட அனு மதி வாங்கி விட்டீரா?" என்று வீராப்பாக வினவினர்.

லண்டனில் அமைதி வழியில் போராட்டம் நடத்த நினைப்பது   "Right to Protest" என்றவுடன் மீண்டும் நழுவினர்.

"நாங்கள் போலீசுக்குச் சொல்லப் போகிறோம்" என்று சிறிது நேரம் கைப் பேசியைத் துழாவினர். "தாராளமாக தொடர்பு கொள் ளுங்கள்" என்று தோழர்கள் பதிலடி கொடுக்க, கடைசியில் ஹிந்துத்வா வாதிகள் கலைந்து சென்றனர்.

எங்களைக் 'காட்டுமிராண்டிகள்', 'கொள்கை அற்றவர்கள்' என்றும், 'நீங்கள் சாக்கடைகள்' என்றும் 'உங்களை போல் நான் முதலில் தமிழன் அல்ல, முதலில் நான் ஹிந்து' என்று சொல்லி விட்டு சென்றார் ஒரு ஹிந்துத்துவவாதி (இவரே சற்று முன்பு 'நான் தமிழன்! தமிழன்!' என்று சொல்லிட்டு, பிற்பாடு தன்னை ஹிந்து என்ற உண்மையை வெளிப்படுத்தி விட்டார்). அடுத்த பூனைக்குட்டியும் வெளியே வந்தது.

3. "சங்கராச்சாரியார் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!"

தமிழை அவமதித்த காஞ்சி சங்கரமட இளைய மடாதிபதி பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர் தோழர். தமிழை நீச பாஷை எனும் ஹிந்துத்வ பார்ப்பனீய சங்கரமடம் தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழை அவமதித்த சங்கராச்சாரியாரை மன்னிப்பு கேட்க சொல்வீர்களா? என்று கேட்டதற்கு, "மாட்டோம்" என்றும் கூறி விட்டனர். அடுத்த பூனைக்குட்டியும் வெளியே வந்தது.

பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்ட தோழர்களும், தமிழ்த் தோழமை தோழர்களும் தங்கள் கருத்துகளை கண்டனங்களை சிறப் பாகப் பதிவு செய்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner